astrology dinamani

வாழ்வியல் பயணம்

ஜோதிடத்தின் அறிவியலைப் புரிந்துகொள்ளும்முன், ஜோதிடத்தின் தற்போதை நிலை குறித்தும், ஒரு ஜாதகத்தைப் பார்த்து ஜோதிடர் சொல்லும் பலன்கள் சரியா என்பது குறித்தும் நமக்குள் எழும் சில ஐயப்பாடுகள் முதலில் களையப்பட வேண்டும் என்று முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். வாருங்கள் தொடர்ந்து பார்ப்போம். பிறந்த நேரம் இன்றைய நவீன உலகில், ஒரு குழந்தையை எந்த நாளில் எந்த நேரத்தில் வெளியே எடுத்தால் அந்தக் குழந்தையின் வாழ்வு சிறப்பாக அமையும் என்ற அளவில், காலத்தை முன்பே தீர்மானித்து சுகப்பிரசவம் ஆவதற்கு […]

2017/11/24

  முழுமையான வாழ்வியல் வெற்றி என்பது ஒவ்வொருவருக்கும் சாத்தியமான ஒன்றுதான். ப்ரச்னம், கணிதம், கோளம், நிமித்தம், முகூர்த்தம் என ஐந்து பகுதிகளுடன் ஜாதகத்தையும் ஒருங்கிணைத்துப் பார்ப்பதன் மூலம் அந்தச் சாத்தியத்துக்கு மேலும் வலு கூடும் என்பதுதான் ஜோதிட சாஸ்திரம் தரக்கூடிய உறுதிப்பாடு. அந்த வகையில், ஜோதிட சாஸ்திரத்தின் அந்த அடிப்படை ஆறு பிரிவுகளைப் பற்றிய உண்மைகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம் என்பதுடன், அவசியமானதும்கூட. அவற்றைப் பற்றி இனி வரும் அத்தியாயங்களில் விரிவாகப் பார்ப்போம். ஜோதிட அறிவியலின் அடிப்படைக் […]

2017/11/09

பிறந்த இடம் மற்றும் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு நிமிட துல்லியத்தில் கணிக்கப்படும் ஒருவரின் ஜாதகத்தில் ஆன்மாவை பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள முடியுமா என்ற கேள்வியுடன் முடிந்த முந்தைய அத்தியாயத்தை தொடர்வோம். ஜாதகத்தில் கிரகங்களும் கால நிர்ணயமும் நாம் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் ஜாதகம் என்பது காலத்தை அடிப்படையாகக் கொண்டது. காலத்தை தெளிவாக அறிந்துகொள்ளவும் கணிக்கவும், இறைவனின் படைப்புகளான கோள்கள், நட்சத்திரங்கள், மற்றும் பஞ்சபூதங்கள் கருவிகளாக உள்ளன. ஒரு குழந்தை பிறந்த இடம் மற்றும் நேரத்தைக் கொண்டு, அந்த நேரத்தில் […]

2017/10/26

வேகமாக நகர்ந்துகொண்டிருக்கும் இன்றைய காலச் சூழலில், சாதாரணமாக ஏற்படும் பொதுவான பாதிப்புகள்கூட தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி, தீர்க்க முடியாத அளவுக்கு ஒருவரை வேதனைக்குள்ளாக்கி விடுகிறது. அப்படியிருக்கும்போது, விஞ்ஞானம் மற்றும் மருத்துவத்துக்கு இன்றளவும் சவால்கள் நிறைந்ததாகக் கருதப்படும் அதேசமயம், இன்று பெரும்பாலானவர்களால் ஓரளவு உண்மை என்று ஏற்றுக்கொண்டிருக்கும் செய்வினை, திருஷ்டி, மருந்து வைத்தல், ஆவிகள் தொல்லை, சில சாப தோஷங்கள் போன்றவற்றால் ஒருவர் பாதிப்புக்குள்ளாகும்போது, கடும் உடல் உபாதைகள், மன நோய்கள், வாழ்க்கைச் சீரழிவு, தற்கொலை எண்ணங்கள் மற்றும் […]

2017/10/12

ஆம், அடுத்த பத்து ஆண்டுகள் கற்றலையே வேள்வியாக்கினேன். கற்றல், கற்றல், கற்றலே என் வாழ்க்கையானது. இதனால், என்னால் ஜோதிட சாஸ்திரத்தில் புதிய உயரங்களைத் தொடமுடிந்தது. ஆசிரியருக்கு ஒரு மாணவன் செலுத்தும் நன்றியின் நல்ல அடையாளம், அந்த ஆசிரியரைவிட அனைத்து வகையிலும் தான் சிறந்து விளங்குவதுதான். இதையே என் நெஞ்சில் பதிய வைத்துக்கொண்டேன். அதற்கேற்பவே என் ஆய்வுகளும் தொடர்ந்தன. ஒவ்வொரு நிறையிலும் நம் கண்களுக்குப் புலப்படாமல் ஒரு குறை மறைந்திருக்கும். அதேபோல், ஒவ்வொரு குறையிலும் ஒரு நிறை மறைந்திருக்கும். […]

2017/09/28

வாழ்வியல் பயணம்!

‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது முதுமொழி. மனிதன் தன் வாழ்வில் முன்னேற முயற்சியை மேற்கொள்கிறானோ இல்லையோ, எதாவது ஒரு வகையில் தன் எதிர்காலம் பற்றித் தெரிந்துகொள்ள ஜோதிடத்தை நாடிச் செல்கிறான். மனிதனுடைய வாழ்க்கைப் பயணம் என்பது ஆன்மாவின் பயணமே. கர்மவினைகளே ஆன்மாவின் பயணத்தை முன்நின்று நடத்துகிறது. ஆன்மாவின் பயணப் பாதையில் கர்மவினைகள் ரகசியப் பெட்டகங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. அந்த ரகசியப் பெட்டகங்களைத் திறக்கும் சக்திவாய்ந்த ஒரே திறவுகோல், வேதத்தின் கண்ணாகப் போற்றப்படும் ஜோதிட சாஸ்திரம் மட்டுமே.

நான் அனைவரும் இன்று ஜாதகம் மட்டுமே ஜோதிட சாஸ்திரம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது தவறு மட்டுமல்ல; அறியாமை என்றும்கூட சொல்லலாம். ஏனெனில், ஜோதிட சாஸ்திரம் என்பது ஜாதகம், கணிதம், கோளம், முகூர்த்தம், நிமித்தம், ப்ரச்னம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொக்கிஷமாகும். தவிர, விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் என்ற இருபெரும் சக்திகளின் கலவையே ஜோதிட சாஸ்திரம். அதாவது, விஞ்ஞான மார்க்கத்தில் மெய்ஞானத்தை அணுகும் முறை. ஒரு மனிதன் தன்னை முழுவதுமாக அறிய முற்படும்போதுதான் ஜோதிட சாஸ்திரத்தின் ஆழத்தையும் அடர்த்தியையும் உணர முடியும்.

அதிமுக்கியத்துவமும், மனிதனின் இறந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிலைகளை தெள்ளத் தெளிவாகவும் எடுத்துரைக்கக்கூடிய; விஞ்ஞானத்தை எளிதாக விளக்கி, மெய்ஞானம் என்னும் பாதை மூலம் பரம்பொருளாக விளங்கும் தெய்வ சக்தியை அடையும் ஓர் உன்னத உந்து விசையாகவும் விளங்கும் ஜோதிட சாஸ்திரத்தை ‘வாழ்வியல் பயணம்’ (Astro Life Science) என்ற இந்தத் தொடர் விளக்குகிறது. அதாவது, ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை உண்மைகளுக்கும், அதில் இன்றைய நம்முடைய அணுகுமுறைகளுக்கும் உள்ள வேறுபாட்டை முப்பரிமாண விளக்கங்களுடன் இத் தொடரில், வாழ்வியல் வழிகாட்டி R.K., நம் அனைவரிடமும் பகிர்ந்துகொள்கிறார்.

தனக்கு ஏற்பட்ட ஓர் இறை உந்துதலில் ஜோதிட சாஸ்திர ஆய்வில் விடாமுயற்சியுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அறிவியலை யார் வேண்டுமானாலும் எவ்வயதிலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், கலை என்பது வேறு பரிமாணம் கொண்டது. அதைக் கற்றுத் தெளிய வேண்டுமானால், அதனுடன் ஆத்மார்த்தமாக உறவாட வேண்டும், அதனுடனேயே பயணிக்க வேண்டும். அப்போதுதான் கடினமான கலையை கற்று அதில் தேர்ச்சி பெறுவது சாத்தியமாகும் என்பதில் உறுதிப்பாடு உள்ளவர்.

அதன் அடிப்படையில்தான், ஜோதிட சாஸ்திரம் என்னும் சாகாக் கலையுடன் தன்னை ஒருங்கிணைத்து, அதனுள் தன்னை கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அர்ப்பணித்து, அக்கலையை தன் வாழ்வென அதனுடனே பயணித்துக்கொண்டிருக்கும் வாழ்வியல் வழிகாட்டி R.K., ஜோதிடத் துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஜோதிடத்தின் அடிப்படை சாரங்களையும், புதிய கண்ணோட்டத்துடன் ‘வாழ்வியல் பயணம்’ என்ற இந்தத் தொடரில் விவரிக்க உள்ளார்.

வாழ்வியல் வழிகாட்டி R.K. அவர்களின் முகவரி:

Astro Life Science,
Door No. 1222 A/1, Trichy Road,
Behind J.S. Empire,
Coimbatore – 641 018.
Mobile: 9443436695.