astrology dinamani

வாழ்வியல் பயணம்

தமிழகத்தில் அரசியல் சார்ந்தும் அரசு சாராமலும் நடைபெற்று வரும் பல பிரச்னைகளைக் கவனித்துப் பார்த்தோமேயானால், தண்ணீர் மற்றும் தண்ணீர் சார்ந்த விஷயங்களே மிக முக்கியக் காரணங்களாக இருப்பது புரியும். இதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள், தனி நபர் வருமான இழப்புகள், விரயமாகும் மனித நேரங்கள், அசௌகரியங்கள் மிக அதிகம். தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ள (காவிரி, கிருஷ்ணா, முல்லைப் பெரியாறு…) தண்ணீர் சார்ந்த பிரச்னைகளை தமிழ்நாடு மாநிலத்துக்கானது மட்டும் என்று பார்ப்பது தவறு. இந்த நாடு எதிர்கொள்ளப்போகும் மாபெரும் […]

2018/05/30

ஜாதகத்தின் அடிப்படை ஆதாரமே கிரகங்கள் தான். கிரகங்கள் கண்ணுக்குத் தெரியாத காலத்தின் அங்கம் என்பதாலும், கோள்களைப் பற்றி விஞ்ஞானம் மிகத் தெளிவான விளக்கங்களைச் சொல்லியிருப்பதாலும், பக்தி மார்க்கத்தில் கிரகங்களின் தன்மை மற்றும் அவற்றால் கிடைக்கும் பலன்களைப் பற்றிய அறிவு வலிமையாக உணர்த்தப்பட்டிருப்பதாலும், ஒருவரின் வாழ்க்கையைக் கிரகங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறையால் மாற்றிவிடலாம் என்கிற அசாத்திய நம்பிக்கையை மனிதன் தனக்குள் ஏற்படுத்திக்கொண்டுவிட்டான். இது அந்த அளவுக்குச் சாத்தியமில்லை என்பதை ராமாயணத்தில் ராவணன் – நவக்கிரகங்கள் சம்பந்தப்பட்ட நிகழ்விலிருந்து […]

2018/02/01

பிரச்னைகள் உருவாவதற்கான காரணங்களையும், அவற்றை சரி செய்யும் வழிமுறைகளையும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். எதிர்காலத்தை தெரிந்துகொண்டு, தற்போது நடக்கும் நிகழ்வுகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அனைவரும் ஜாதகத்துடன் நாடிச் செல்வது ஜோதிடர்களைத்தான். பிறந்த நேரம் முக்கியம் பிறந்த நேரம் என்பது ஜாதகத்தில் மிக முக்கியமான ஒன்று. இதை வைத்தே ராசிக் கட்டம் மற்றும் கிரகங்களின் நிலை கணிக்கப்படுகிறது. ஆனால், பிறந்த நேரத்தைக் கணிப்பதில் பல்வேறு வகையான குழப்பங்கள் நிலவி வருகிறது. அதாவது, குழந்தை பிறந்த நேரம் என்பது […]

2018/01/04

  ஜோதிடம் உருவான வரலாற்றையும், காலத்துக்கு ஏற்ப கடந்துவந்த பாதையையும் முந்தைய அத்தியாயங்களில் பார்த்தோம். வாழ்வை சந்தோஷமானதாகவும், வெற்றிகரமாகவும் ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதுதான் மனிதனின் ஆகப்பெரிய விருப்பம். பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு என்பது வாழ்வின் சுழற்சிமுறை. நல்வினையும், தீவினையும் சுழற்சிமுறைக்கான காரணங்கள். பிறப்பு, இறப்பு சுழற்சி துன்பமயமானது. அதனால்தான் பிறப்பு, இறப்பு அற்ற முக்தி நிலையை அடைவதே வாழ்வில் இலக்காக வைத்து ஒருவன் செயல்களை மேற்கொள்ள வேண்டும் என்று வள்ளுவம் கூறுகிறது. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் […]

2017/12/21

மேலை நாடுகளில் ஜோதிடம் வளர்ந்த வரலாற்றை முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம். ஆனால், மேலை நாடுகளில் ஜோதிடம் தோன்றுவதற்கு முன்னரே, இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஜோதிடக் கலை தோன்றிவிட்டது. இந்தியாவின் முதன்மை நாகரிகம் சிந்துச் சமவெளி நாகரிகம். மேலை நாடுகளில் இருந்து குடிபெயர்ந்து இந்தியாவுக்குள் வந்து சிந்து நதிக்கரையில் வாழ்ந்தவர்கள்தான் ஆரியர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவர்களே சிந்துச் சமவெளி நாகரிகத்தை தோற்றுவித்ததாகக் கூறப்படுகிறது. இவர்களின் வருகைக்கு பின்னரே இந்தியாவில் வானவியல், கணிதம் ஆகிய துறைகள் மிகப் பெரும் வளர்ச்சியைப் […]

2017/12/07

வாழ்வியல் பயணம்!

‘முயற்சி திருவினையாக்கும்’ என்பது முதுமொழி. மனிதன் தன் வாழ்வில் முன்னேற முயற்சியை மேற்கொள்கிறானோ இல்லையோ, எதாவது ஒரு வகையில் தன் எதிர்காலம் பற்றித் தெரிந்துகொள்ள ஜோதிடத்தை நாடிச் செல்கிறான். மனிதனுடைய வாழ்க்கைப் பயணம் என்பது ஆன்மாவின் பயணமே. கர்மவினைகளே ஆன்மாவின் பயணத்தை முன்நின்று நடத்துகிறது. ஆன்மாவின் பயணப் பாதையில் கர்மவினைகள் ரகசியப் பெட்டகங்களாகப் பாதுகாக்கப்படுகின்றன. அந்த ரகசியப் பெட்டகங்களைத் திறக்கும் சக்திவாய்ந்த ஒரே திறவுகோல், வேதத்தின் கண்ணாகப் போற்றப்படும் ஜோதிட சாஸ்திரம் மட்டுமே.

நான் அனைவரும் இன்று ஜாதகம் மட்டுமே ஜோதிட சாஸ்திரம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம். ஆனால், அது தவறு மட்டுமல்ல; அறியாமை என்றும்கூட சொல்லலாம். ஏனெனில், ஜோதிட சாஸ்திரம் என்பது ஜாதகம், கணிதம், கோளம், முகூர்த்தம், நிமித்தம், ப்ரச்னம் என அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு பொக்கிஷமாகும். தவிர, விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் என்ற இருபெரும் சக்திகளின் கலவையே ஜோதிட சாஸ்திரம். அதாவது, விஞ்ஞான மார்க்கத்தில் மெய்ஞானத்தை அணுகும் முறை. ஒரு மனிதன் தன்னை முழுவதுமாக அறிய முற்படும்போதுதான் ஜோதிட சாஸ்திரத்தின் ஆழத்தையும் அடர்த்தியையும் உணர முடியும்.

அதிமுக்கியத்துவமும், மனிதனின் இறந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்கால நிலைகளை தெள்ளத் தெளிவாகவும் எடுத்துரைக்கக்கூடிய; விஞ்ஞானத்தை எளிதாக விளக்கி, மெய்ஞானம் என்னும் பாதை மூலம் பரம்பொருளாக விளங்கும் தெய்வ சக்தியை அடையும் ஓர் உன்னத உந்து விசையாகவும் விளங்கும் ஜோதிட சாஸ்திரத்தை ‘வாழ்வியல் பயணம்’ (Astro Life Science) என்ற இந்தத் தொடர் விளக்குகிறது. அதாவது, ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை உண்மைகளுக்கும், அதில் இன்றைய நம்முடைய அணுகுமுறைகளுக்கும் உள்ள வேறுபாட்டை முப்பரிமாண விளக்கங்களுடன் இத் தொடரில், வாழ்வியல் வழிகாட்டி R.K., நம் அனைவரிடமும் பகிர்ந்துகொள்கிறார்.

தனக்கு ஏற்பட்ட ஓர் இறை உந்துதலில் ஜோதிட சாஸ்திர ஆய்வில் விடாமுயற்சியுடன் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். அறிவியலை யார் வேண்டுமானாலும் எவ்வயதிலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால், கலை என்பது வேறு பரிமாணம் கொண்டது. அதைக் கற்றுத் தெளிய வேண்டுமானால், அதனுடன் ஆத்மார்த்தமாக உறவாட வேண்டும், அதனுடனேயே பயணிக்க வேண்டும். அப்போதுதான் கடினமான கலையை கற்று அதில் தேர்ச்சி பெறுவது சாத்தியமாகும் என்பதில் உறுதிப்பாடு உள்ளவர்.

அதன் அடிப்படையில்தான், ஜோதிட சாஸ்திரம் என்னும் சாகாக் கலையுடன் தன்னை ஒருங்கிணைத்து, அதனுள் தன்னை கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் அர்ப்பணித்து, அக்கலையை தன் வாழ்வென அதனுடனே பயணித்துக்கொண்டிருக்கும் வாழ்வியல் வழிகாட்டி R.K., ஜோதிடத் துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களையும் ஜோதிடத்தின் அடிப்படை சாரங்களையும், புதிய கண்ணோட்டத்துடன் ‘வாழ்வியல் பயணம்’ என்ற இந்தத் தொடரில் விவரிக்க உள்ளார்.

வாழ்வியல் வழிகாட்டி R.K. அவர்களின் முகவரி:

Astro Life Science,
Door No. 1222 A/1, Trichy Road,
Behind J.S. Empire,
Coimbatore – 641 018.
Mobile: 9443436695.