astrology dinamani

ஜோதிட நுணுக்கங்கள்

திருமணத்துக்கு முதலில் பார்ப்பது திருமணப் பொருத்தம்தான். பொருத்தம் இருந்தால்தான் திருமணமே நடைபெறுகிறது. திருமணப் பொருத்தம் என்பது திருமணம் நடைபெற எடுக்கும் முயற்சியில் முதல்படியாகும். இதில் தவறு நடந்தால், வாழ்க்கையின் போக்கே மாறிவிடுகிறது. ஜாதகக் கணிப்பில் இரண்டு முறைகள் இருக்கின்றன. ஒன்று வாக்கிய முறை; மற்றொன்று திருக்கணித முறை. இதில் எந்த முறையில் கணிப்பது? முதன் முதலில் வந்தது வாக்கிய முறை. அதற்குப்பின், வாக்கிய முறையில் உள்ள குறைகளைக் களைந்து வந்தது திருக்கணித முறை. திருக்கணித முறை தற்காலக் […]

2018/05/26

இதுவரையில் கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக் கொள்வதனால் உண்டாகும் பலன்களைப் பார்த்தோம். முடிந்த வரையில் உதாரண ஜாதகத்துடன் பார்வையை விளக்கி இருந்தோம். இப்போது லக்கினத்துடன் உண்டாகும் பலன்களைப் பார்ப்போம். முதலில் ஜாதகத்தை பாகை, கலைகளில் கணித்துக் கொள்ள வேண்டும். லக்கினம் என்ன பாகை, கலைகளில் இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். அந்த லக்கினத்தை என்னென்ன கிரகங்கள் பார்க்கின்றன என்று பார்த்துப் பலன் சொல்லுவோம். உதாரண ஜாதகத்தைப் பாருங்கள். இந்த உதாரண ஜாதகத்தில் என்னென்ன பார்வைகள் லக்கினத்திற்கு இருக்கின்றன என்று பாருங்கள். […]

2018/05/02

அடுத்து, சூரியன் மற்றும் சந்திரனுடன் சேர்ந்து புதன் உண்டாக்கும் பலன்களைப் பார்ப்போம். மற்ற கிரகங்களுடனான பலன்களை ஏற்கெனவே பார்த்துவிட்டோம். இப்போது சூரியனுடன் உண்டாக்கும் பார்வையின் பலன்களைப் பார்ப்போம். சூரியனுக்கும் புதனுக்கும் உள்ள இடைவெளியானது எப்பவுமே 28 பாகைகளுக்குமேல் போகாது. ஆகவே, இருவரின் சேர்க்கையைத் தவிர மற்ற பார்வைகள் ஏற்பட வழியில்லை. சூரியன் – புதன் சேர்க்கை ஒரு குறிக்கோள் உள்ளவர்; நகைச்சுவையுடன் பேசக்கூடியவர், எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். புதன் புத்திகாரகன் அல்லவா? அவர் […]

2018/03/05

இனி, சுக்கிரன் மற்ற கிரகங்களுடன் சேர்ந்து உண்டாக்கும் பார்வையின் பலன்களைப் பார்ப்போம். சுக்கிரன் – புதன் பார்வை சுக்கிரனும் புதனும் எப்போதும் சூரியனுக்கு அருகிலேயே இருப்பவர்கள். இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள தூரம் எப்பவுமே 72 பாகைகளுக்கு மேல் போகாது. அதிகபட்சமாக 72 பாகைகள் வரையில்தான் போகமுடியும். ஆகவே, சுக்கிரன், புதன் சேர்க்கை, முப்பது பாகைப் பார்வை, 45 பாகைப் பார்வை, 60 பாகைப் பார்வை ஆகிய மூன்று பார்வைகள்தான் ஏற்பட முடியும். சுக்கிரன், புதன் சேர்க்கை, […]

2018/02/14

இனி மற்ற கிரகங்களுடன் செவ்வாய் உண்டாக்கும் பலன்களைப் பார்ப்போம். செவ்வாய் – புதன் சேர்க்கை புதன் புத்திகாரகனல்லவா? செவ்வாயுடன் சேரும்போது புத்திக்கூர்மை அதிகமாகிறது. சாதுரியமாகப் பேசக்கூடியவர். அதே சமயத்தில் துடுக்காக மற்றவர்களைப் பேசி அவர்களைக் காயப்படுத்தாது இருக்க வேண்டும். செவ்வாய் – புதன் 120 பாகை, 60 பாகை, 30 பாகைப் பார்வை மனத்தளவில் உற்சாகமும் தன் நம்பிக்கையும் கொண்டவர். வாக்குச் சாதுரியம் கொண்டவர்; மிகவும் கெட்டிக்காரர். கணிதத்தில் வல்லமை படைத்தவர்; பேச்சாற்றல் படைத்தவர். 180 பாகைப் […]

2018/02/01

ஜோதிடம் என்பது கடல் போன்றது. பற்பல ஜோதிட விற்பன்னர்கள் பல காலகட்டங்களில் இதை உலகுக்கு அளித்துள்ளார்கள். பலவிதமான கருத்துகளுக்கு இதில் இடமுண்டு.

உதாரணமாக, ஒரு குழந்தையின் பிறப்பை எடுத்துக்கொள்வோம். பிறந்த குழந்தையின் உடல் எப்போது பூமியின் மீது படுகிறதோ அந்த நேரமே குழந்தையின் ஜெனன நேரம் என்பார்கள். இன்னும் சிலர் தாய்க்கும் சேய்க்கும் தொடர்புள்ள தொப்புள் கொடி எப்போது அறுபடுகிறதோ அதுவே குழந்தை பிறந்த நேரம் என்பார்கள். இன்னும் சிலர், குழந்தையின் சிரசு எப்போது முதலில் தென்படுகிறதோ அதுவே பிறந்த நேரம் என்பார்கள். சிரசு உதயம்தான் முக்கியம் என்பார்கள்.

இந்தக் கருத்துகளை எல்லாம் கூறியவர்கள் நமது பெரியவர்கள்தான். இதில் எதை எடுத்துக்கொள்வது என்பதில் ஆரம்ப நிலை ஜோதிடர்களுக்குக் குழப்பம். இதில் எது சரி என்பதை அனுபவம்தான் கற்றுக்கொடுக்க வேண்டும். இதைப்போன்ற பல ஜோதிட ரகசியங்களை நாம் ‘ஜோதிட நுணுக்கங்கள்’ என்ற இந்தப் பகுதியில் விவாதித்து தெரிந்துகொள்ளப்போகிறோம்.

இதில் மாற்றுக் கருத்து உள்ளவர்கள், தங்கள் கருத்துகளைத் தெரியப்படுத்தலாம். இதில் வரும் கருத்துகள், வாசர்களுக்குப் பலன் அளிக்குமானால், அதைவிட வேறெதுவும் நமக்குத் தேவை இல்லை.