astro_dinamani

ஜாதகக் கொத்துக்கள்

ஒருவர் ஜனனம் ரிஷபம் லக்னத்தில் ஆகப்பெற்றால் ஜாதகர் பெரும்பாலான பெண்களால் விரும்பப்படுவர். ரிஷப லக்னத்தில் ஜனனமானவருக்கு பல தாரங்களை அடையப்பெறுவதோடு, தாரதோஷமும் அடையப்பெறுவர். மேலும், இவர்களது முதல் மனைவி உயிருடன் இருக்கும்போதே, மறுமனைவி அல்லது பலவித பெண்களுடன் தொடர்பு இருக்கக்கூடும். குடும்பப்பற்று/பாசம்/நண்பர்களிடம் (ஆண்/பெண்) பாசம்/நாசம் பெற்றும் தயாள குணம், தர்மம் செய்தல், பிறரை வசப்படுத்தும் இயல்பான குணம், 6-12-29 ஆகிய வயதுகளில், கொடிய நோயினால் அவதிப்படல், மரண கண்டம் ஆகியவை அடையப்பெறுவர் என்பது ஜோதிட சாஸ்திரமாகும். ரிஷப […]

2016/04/26

கஜகேசரி யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் ஜனன இராசிக்கு, 4-7-10ம் இல்லத்தில் குருபகவான் அமையப்பெறுவது கஜகேசரி யோகம் ஆகும். இதனால் ஜாதகர் தங்களது வாழ்க்கையில் படிப்படியாக வளர்ச்சி முன்னேற்றம் பெறல், வாழ்க்கை என்றால் என்ன என்பதை உணர்வர். மேலும் எந்தச் சூழ்நிலையிலும் இறுதி வெற்றியைப்பெற்றும், மக்களின் பேராதரவைப் பெறல், புகழ்/இறவாய்ப்புகழ் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும். சந்திராதி யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் ஜனன இராசிக்கு 6-7-8ம் இல்லங்களில் புதன்/குருபகவான்/சுக்கிரன் அமையப்பெறுவது சந்திராதியோகம் ஆகும். இதனால் தலைவர் ஆகுதல் மற்றும் அமைச்சர் […]

2016/04/20

குருதுரோக யோகம்: ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ராசிக்கு முன்னும் பின்னும் உள்ள ராசிகளில் சூரியன்/இராகு/கேதுவைத் தவிர, மற்ற கிரகங்கள் இருந்தால், இந்த அமைப்பு குருதுரோக யோகம் ஆகும். இதனால் ஜாதகர், சகலசம்பத்தும்/நல்ல குண நலன்கள்/ வாகனசுகம் ஆகியவை அடையப்பெறுவர் என்பதாகும். அநாபாயோகம்: ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் நின்ற ஸ்தானத்திற்கு 12-ம் இல்லத்தில் சூரியனைத் தவிர, மற்ற கிரகங்கள் இருப்பது, அநாபாயோகம் ஆகும். இதனால், ஜாதகர் சிறப்பான உடல்நலம் பெறல், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, வசதியான வாழ்க்கை, […]

2016/04/05

பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் ஜாதகத்தில் அசுர குருபகவான்/சுக்கிரன் தருகின்ற யோகங்களில் பஞ்சமாபுருஷ யோகங்களில் முதலாவது மாளுவயோகம் ஆகும். அதாவது ஒரு ஜாதகத்தில் சுக்கிரன் 4-7-10 ஆகிய கேந்திர ஸ்தானங்களில் உச்சம்/ஆட்சி பெற்று அமர்ந்திருந்தால் மற்ற அசுபக் கிரகங்களின் பார்வை அற்றும் இணைந்து நிற்காமலும் இருந்தால் அதுவே/அந்த அமைப்பு மாளுவயோகம் ஆகும். இந்த யோகம் உள்ள ஜாதகர் ஓர் கலைத் தொழிலில் புகழ் பெறுவர் மற்றும் உறுதிமிக்க மனம் அறிவாற்றல், மிக்க புகழும் உடைய மனைவி, மக்கள், […]

2016/03/08

இப்பூவுலகில் ஒரு மனிதரிடம் அழகு, வசீகரம், வாக்கு வன்மை, பொன், பொருள் சிறப்பு, வீரம், கல்வி, ஞானம் ஆகிய அனைத்தும் இருந்தால் மட்டும் வளமான வாழ்க்கையை அடைவது கடினம். அவரது ஜாதகத்தில் நவக்கிரகங்கள் வலுவாகவும், நல்ல தன்மையாகவும, சுரியன் பார்வை (குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறைச் சந்திரன்) மற்றும் சிறப்பான விதி அமையாதபட்சத்தில், அம்மனிதர்/ஜாதகர் உயர்ந்த பண வசதியுடன் சிறப்பான வாழ்க்கையை ஒரு போதும் அடைய இயலாது என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும் என்பதை யாராலும் […]

2016/02/25

இந்தக் கலியுகத்தில், விஞ்ஞான / கம்ப்யூட்டர் யுகத்தில் வாழும் பல தரப்பட்ட மக்கள், தங்களது வாழ்வில் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஜோதிட சாஸ்திரத்தையும் சகுனம் பார்ப்பதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி, மக்களுடைய வாழ்வில் ஜோதிடம் இரண்டறக் கலந்துவிட்டது. பெரும்பாலான மக்கள், பல வகையான ஜோதிட நூல்களைப் படித்து அறிவதில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காட்டி வருகின்றனர்.

ஜோதிட சாஸ்திரத்தின் மூலம், நடக்க இருக்கும் சம்பவங்களை, (இறைவனின் கருணையால் தீர்க்க தரிசனம் மற்றும் இயற்கையின் ரகசியம்) முன்கூட்டியே அறிய முடியும். மேலும், ஜோதிட சாஸ்திரம் என்பது வேதத்தின் ஆறு பாகங்களில் ஒன்று.

எந்த ஒரு மனிதனின் வாழ்க்கையும் ஏற்ற இறக்கங்களைக் கொண்டதாகத்தான் இருக்கும். நன்மை தீமை கலந்ததுதான் வாழ்க்கை என்பதை உணர்ந்து, வாழ்க்கையில் நன்மைகளைப் பெருக்கி, தீமைகளைக் கழிக்கக் கற்றுக்கொடுக்கும் வகையில் ஜாதகக் கொத்துகள் என்ற புதிய பகுதி இங்கே உங்களுக்காக…

ஜோதிடர் ஏ.கே.ஆறுமுகம், திருநெல்வேலி மாவட்டம் ஆத்தூர் கஸ்பாவைச் சேர்ந்தவர். ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த இவர், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். ஜோதிடத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் வாய்ந்தவர். எந்த ஒரு ஜாதகத்தையும் மிகத் துல்லியமாகக் கணித்து, பலன்களைச் சொல்வதில் வல்லவர். இவர் எழுதிய ஜாதகத்தில் உங்கள் எதிர்காலம் என்ற புத்தகம், மக்களின் பெருத்த வரவேற்பை பெற்றது.