astrology dinamani

சிறப்பு பகுதிகள்

‘நாள் செய்வதை நல்லோர் செய்யார்’ என்ற பழமொழியைக் கேட்டிருப்பீர்கள். எந்த நேரத்தில் என்ன செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள் வகைப்படுத்தியுள்ளனர். ஜோதிடத்தில் ஹோரை என்று குறிப்பிடுவது அந்த நேரத்தைத்தான். நாம் செய்ய விரும்பும் காரியங்களை எந்த ஹோரையில் செய்தால் பலன் கிடைக்கும் என்பதை இந்த ஹோரை நேரம் நமக்கு வழிகாட்டுகிறது. காலை ஆறு மணிக்கு இந்த ஹோரை நேரம் துவங்குகிறது. சரி, குரு ஹோரையில் என்னென்ன செய்யலாம் என்பதைப் பற்றி விரிவாகப் […]

2017/11/09

வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். ஒரு வில்வ தளம் லட்சம் தங்க மலர்களுக்கு சமமாகும். ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணித்தால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும். அவ்வளவு மகிமை வாய்ந்த வில்வ தளத்தை சில நாட்களில் பறித்தால் பாவம் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்த நாட்களில் வில்வ தளத்தை பறிக்கக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…… மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் வில்வத்தைப் […]

2017/08/19

ஸ்ரீ ஆண்டாளின் ஜன்ம நட்சத்திரமான ஆடிப்பூரம், அம்மனுக்கும் உகந்ததாகும். அன்றை தினம் புகழ் பெற்ற அம்மன் ஆலயங்களில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறும். அகிலாண்ட நாயகிக்கு வளையல்களாலேயே அலங்காரம் செய்து வழிபடும் நாள் ஆடி மாதத்தில் வரும் பூரம் நக்ஷத்திர நாள். கர்ப்பமான பெண்களுக்கு வளைகாப்பு செய்வது போல், அம்பிகைக்கு வளையல்கள் சாத்தியும் வழிபாடுகள் நடைபெறும். சுமங்கலிப் பிரார்த்தனைக்காகவும், கன்னிப் பெண்கள் நல்ல இடத்தில் திருமணம் நடைபெற வேண்டியும் அம்மனுக்கு வளையல்களை சமர்ப்பிப்பார்கள். இதேபோல் ஆடிப் பதினெட்டு […]

2017/07/26

அம்பத்தூர் மௌனசாமி மடம் தெருவில் ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை – ருத்ர பரிஹார் ரக்ஷா சென்டர் மற்றும் Seythigal.in இணைந்து ராகு கேது பெயர்ச்சி சிறப்பு லக்ஷ ஆவர்த்தி ஹோமம் நடத்தப்படுகின்றது. நிகழும் மங்களகரமான ஹேவிளம்பி வருடம் தக்ஷிணாயனம் ஆடி மாதம் 11-ம் தேதி (27-7-2017) வியாழக்கிழமை அன்று சுக்ல சதுர்த்தியும், உத்திர நக்ஷத்ரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 16.48-க்கு பகல் 12.48-க்கு துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம ராசியிலிருந்து […]

2017/07/21

உலகை ஆளும் அன்னை பராசக்தி தனது திருவிளையாடல்களை அரங்கேற்ற பூலோகத்தில் மனித உருவில் அவதரித்து ஆடிப்பூரம் அன்று. சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் ஆடிப்புரத்தில் தான் அவதரித்தார். அந்நாளில்  ஹயகிரீவர் அவதரித்தால் எனவே அன்றைய தினம் ஹயகிரீவரை வழிபாடு செய்தால் கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்குவார்கள். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மன் பாடல்களை பாடி வழிபட்டு வந்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். சங்கரன் கோயில் திருத்தலத்தில் வீற்றிருக்கும் கோமதியம்மன் பழங்காலத்தில் அந்த பகுதியில் […]

2017/07/18