காலம் உங்கள் கையில்

அடுத்த ஆண்டு ஜூன் மாதத்திற்குள் தனியார் துறையிலேயே சிறப்பான உத்தியோகம் கிடைத்துவிடும். மேலும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் கைகூடும். அவருக்கு தனுசு லக்னம். செவ்வாய்பகவான் பூர்வபுண்ணிய ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று இருப்பதால் செவ்வாய்தோஷம் இல்லை. வெளிநாடு சென்று பொருள் ஈட்டும் யோகமும் உண்டு. சுக ஸ்தானத்திற்கு ஏற்ற சமதோஷம் பார்த்து சேர்க்க வேண்டும். – கே.சி.எஸ் ஐயர்

உங்கள் மகளுக்கு களத்திர ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானாதிபதி லக்னத்தில் அமர்ந்து இருக்கிறார். தற்சமயம் களத்திர ஸ்தானாதிபதியின் தசை நடப்பதால் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சமதோஷமுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். வங்கி, காப்பீடு போன்ற துறைகளில் உத்தியோகம் அமையும். – கே.சி.எஸ் ஐயர்

நாங்கள் மிகுந்த கடன் பிரச்னையில் இருப்பதால் ஜோதிடம் பார்க்கச் சென்றோம். அதில் தெரிந்து கொண்ட விவரங்கள் 1. எனது மூதாதையருக்கு செய்யப்பட்ட செய்வினை கோளாறானது என்னையும் என் குடும்பத்தையும் பாதிப்பதாக தெரிந்து கொண்டோம். 2. எனக்கு நிலையான வேலை இருக்காது என்றும் வெளியூரில் வேலை பார்த்தால் கணவன் மனைவிக்குள் பிரச்னைகள் இன்றி நீடிக்கும் இல்லையேல் பிரிய நேரிடும். 3. இதனால் என் மனைவி …

உங்கள் மகனுக்கு கடக லக்னம். தற்சமயம் அவருக்கு தொழில் ஸ்தானத்தில் அமர்ந்திருக்கும் ராகுபகவானின் தசையில் பிற்பகுதி நடக்கிறது. ராகுபகவானை குருபகவான் தன ஸ்தானத்திலிருந்து பார்வை செய்கிறார். அதனால் அவருக்கு இன்னும் ஓராண்டுக்குள் இந்தியா வந்து உங்களுடன் தங்கும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் மகனுக்கு எதிர்காலம் வளமாக அமையும். – கே.சி.எஸ் ஐயர்

உங்களுக்கு ரிஷப லக்னம். லக்னாதிபதி பூர்வ புண்ணிய ஸ்தானாதிபதி ஆகிய இருவரும் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்ற செவ்வாய்பகவானுடன் இணைந்திருக்கிறார்கள். தர்மகர்மாதிபதியான சனிபகவான் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். குருபகவான் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்கிறார். சூரிய பகவானும் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். மேலும் சந்திர கேந்திரத்தில் உச்சம் பெற்ற சனிபகவான் மற்றும் செவ்வாய் பகவான்கள் இருப்பதால் …

1 2 3 4 99