astro_dinamani

கட்டுரைகள்

கோமாதா என்று போற்றப்படும் கன்றுடன் கூடிய பசுவை முதன் முதலில் உள்ளே அழைப்பது எல்லோரது வீடுகளிலும் நடப்பது. இது தரைத்தள வீடுகளில் மட்டும்  சாத்தியமாகிறது. மாடி வீடுகளில் வசிப்பவர்கள் பசுவின் பொம்மை, காமாட்சி தீபம், மட்டைத் தேங்காயை வைத்து கோபூஜை செய்து விடலாம். வீடு கட்டும் காலத்தில் மற்றவர்களது கண்ணேறுகள் தோஷங்கள் அகல்வதற்காக தெய்வங்கள், மகரிஷிகள், தேவர்கள் இடமாகக் கொண்டுள்ள தெய்வப் பசுவை வாசலில் கோபூஜை செய்து மங்கள வாத்தியம் வேத கோஷங்கள் முழுங்க அழைத்து வருகிறார்கள். […]

2014/01/02

நாமக்கல் மாவட்டத்தின் தலைநகராக திகழும் நாமக்கல் நகரின் நடுவே உள்ள ஒரே கல்லாலான 250 அடி உயர மலையே இங்கு கோயிலாகத் திகழ்கிறது. இம்மலையில் பெரிய நாமங்கள் சார்த்தப்பட்டிருந்ததால் நாமக்கல் என்ற பெயரைப் பெற்றது. ஸ்ரீநாமகிரி அம்மன் பெயரால் நாமகரி என அழைக்கப்பட்டு நாமக்கல் என்ற பெயரைப் பெற்றது என்போரும் உண்டு. இதற்கு ஸ்ரீசைலம் என்ற சிறப்பு பெயரும் வழங்கப்படுகிறது. இரண்யனை வதம் செய்த நரசிம்மர் எவரும் நெருங்க இயலாத உக்கிரமாக காட்சியளித்ததைக் கண்டு, பிரகலாதன் வேண்டுகோளுக்கு […]

2014/01/01

சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர். சதுரகிரி தல வரலாறு: சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து […]

2013/12/31

திருச்சி – தஞ்சை நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெறும்பூர். இந்த ஊரில் உள்ள ஆலயம்தான் திருஎறும்பீசுவரர் ஆலயம். தாருகாசூரன் எனும் அரக்கன் தன்னுடைய தபோபலத்தால், தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தி வந்தான். அசுரப் படைகளுடன் விண்ணுலகம் சென்று போரிட தேவர்களாலும் இந்திரனாலும் முடியவில்லை. தாருகன் அவர்களை தோற்கடித்து தேவலோகத்தைக் கைப்பற்றினான். தேவர்கள் அஞ்சி பிரம்மனிடம் போய் முறையிட்டனர். பிரம்மன் அவர்களை பூலோகத்தில் உள்ள தென் கயிலாயமாகிய திருவெறும்பூருக்குச் சென்று இறைவனைப் பூசித்தால் தாருகனை அழிக்கக் […]

2013/12/31

கரூர் மாவட்டம், பாளையம் அருகே உள்ளது தேவர்மலை என்னும் சிற்றூர். இங்குள்ள நரசிங்கப் பெருமாள் ஆலயம் ருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு யுகங்களைக் கண்டது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் நரசிம்மரை கிருதயுகத்தில் பிரகலாதனும், மகாலட்சுமியும் வழிபட்டனர். திரேதா யுகத்தில் ராமர், சீதை, லட்சுமணன் வணங்கினர். துவாபர யுகத்தில் பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டனர். மூன்று யுகங்களைக் கடந்து கலியுகத்தில் தற்போது நமக்கு நரசிம்மரை காட்சியளித்துக் கொண்டிருக்கிறார். திருமாலின் காக்கும் தன்மை தெளிவாக வெளிப்பட்ட […]

2013/12/31