astrology dinamani

கட்டுரைகள்

ராம தூதரான ஆஞ்சநேயருக்குப் பல பெயர்கள் உண்டு. வாயுபுத்திரன், கேசரி மைந்தன், மாருதி, அனுமன், சொல்லிச் செல்வன், சுந்தரன் எனப் பல பெயர்களில் அவர் அழைக்கப்படுகிறார். ராமாயணக் காவியத்தின் முக்கிய கதாப்பாத்திரமே அவர்தானே. சில கோயில்களில் அனுமார்  பஞ்சமுகத்துடனும் காட்சி கொடுத்து அருள்பாலிப்பதைக் கண்டிருக்கிறோம். அவர்  பஞ்சமுகத்துடன் காணப்படுவது எதனால்? காரணம் இல்லாமல் காரியம் இல்லையே. உலகின் தலை சிறந்த வீரனான தன் மகன் இந்திரஜித்தின் இறப்பினாலும் படைகளின் தோல்வியாலும் கவலை கொண்ட இராவணன் தன்னுடைய சகோதரனான […]

2019/01/11

காஞ்சிபுரத்தில் வீற்றிருக்கும் காமாட்சியம்மன் ஆலயத்தில் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக்கொண்டிருந்தார் மகாபெரியவா. ஒரு சமயம் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் நவராத்திரி விழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அதில் தினமும் வித்துவான்கள் பாடுவார்கள். விழாவின் ஒருநாள் மாலையில் பெரியவரை தரிசிக்கப் பக்தர் ஒருவர் வந்தார். எழுத்தாளரான அவர், தன் புத்தகங்களை பெரியவரிடம் காட்டி விளக்கம் அளித்துக்கொண்டிருந்தார். பக்தர்கள் பலர் தரிசனத்திற்காகக் காத்திருந்தனர். அவர்களைக் கண்டதும் பெரியவர் எழுத்தாளரிடம் இப்போது நீ காமாட்சியம்மனைத் தரிசித்துவிட்டு வா. அங்குத் தர்பார் நடைபெறுகிறது என்றார். எழுத்தாளர் […]

2019/01/11

ஊட்டச்சத்துள்ள மற்றும் சுண்ணாம்பு சத்துள்ள உணவுகளைக் குறைத்து, அதிக அளவில் குப்பை உணவுகளை (JUNK FOOD) எடுத்துக் கொள்பவரா நீங்கள், அப்படியானால் உங்களுடைய ஜாதகத்தில், சூரியன் பலமிழந்து எதிர்மறை செயல்பாட்டில் காணப்படுகிறார் என அறியவும். அதுவே, நிறைய ஊட்டச்சத்துள்ள உணவுகளை  ஒருவர் உண்கிறார் எனில், அவருக்கு சூரியன் பலம் பொருந்தி உள்ளது எனவும், அவர் அதிக தன்னம்பிக்கை உடையவராகவும், அனைத்தையும் எதிர்கொள்ளும் சக்தி இயற்கையிலேயே கொண்டிருப்பார் எனவும் கூறலாம். இதே ஒருவர், அதிக அளவில் கருப்பு உளுந்தால் […]

2018/12/28

கயிலைநாதனான சிவபெருமான், ஒருமுறை பார்வதி தேவிக்கு ஏகாதசி விரத மகிமையை எடுத்துச் சொன்னார். பார்வதி! ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேதயாகம் செய்த பலனை ஏகாதசி விரதத்தால் பெறமுடியும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுசரிக்கும் விரதம் இது என்றார். உள்ளத்தின் பக்தி உணர்வுகளையும், உடலின் ஆரோக்கியத்தையும் இணைப்பது இந்த விரதம். இதனால் உள்ளத் தூய்மை, உடலின் அகத்தூய்மை முதலிய பல நன்மைகள் உண்டாகின்றன. எனவே, அனைத்து ஏகாதசிகளிலும் பலர் விரதம் இருந்தாலும், சிறப்பாக வைகுண்ட ஏகாதசியில் […]

2018/12/18

இன்று செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷத்தை ருணவிமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் பிரதோஷம் என்றாலே மிகவும் விசேஷம் தாங்க! பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம். உலகைக் காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். […]

2018/12/04