astro_dinamani

கட்டுரைகள்

மந்திரங்களில் ராஜ மந்திரம் என்று கருதப்படுவது காயத்ரி மந்திரமாகும். நியமனப்படி காயத்ரியை ஜபிக்கும் ஒருவன் ஞானத்திலும், தேஜஸ்திலும் சிறந்தவனாக இருக்கிறான். ஒரு தாய் தனது குழந்தையை காப்பது போல காயத்ரி மந்திரம் மனித மனதை சிதற விடாமல் காக்கிறது. இந்த மந்திரத்தை சொல்லும் தகுதியை ஒருவன் அடைந்து விட்டான் என அடையாளப்படுத்துவதே பூணூலாகும். பூணூல் அணிந்த பின் அதை அணிவோர் புதிய ஒரு பிறப்பு எய்துவதாக இச்சடங்குக்குப் பொருள் கூறப்படுகிறது. முதன்முதல் பூணூல் அணியும் சடங்கை உபநயனம் […]

2017/08/07

மேஷ ராசியில் சனிபகவான் இருந்தால் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவார். வீண் சண்டைகள் ஏராளமாக ஏற்படும். வாழ்க்கையில் சரிவும் துன்பமும் அடுத்தடுத்து உண்டாகும். எதிரிகளின் தொல்லை அதிகமாக இருக்கும். ரிஷப ராசியில் சனி பகவான் இருந்தால் எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு. தாராள குணம் படைத்தவர்களாக இருப்பீர்கள். மிதுன ராசியில் சனிபகவான் இருந்தால் புத்திர பாக்கியம் குறையும். வாழ்க்கையில் துயரமான சம்பவங்கள் உண்டாகும். போட்டி பந்தயங்களால் இழப்பு உண்டாகும். பொது வாழ்க்கையில் […]

2017/08/05

இன்று சனிப்பிரதோஷம். மகேஷ்வரனை மனதார பூஜிக்க வேண்டிய நாள்.  இந்த நாளில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ நேரமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி ஐந்தெழுத்தை (சிவாய நம) ஓதி வழிபட வேண்டும். எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் […]

2017/08/05

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் பூஜைகளும் கூழ் ஊற்றுதலும் எனத் திருவிழா களை கட்டும். பெண்களுக்கு மிக உகந்த இந்த பூஜைகள், வழிபாட்டின் நீட்சியாக ஆவணியிலும் தொடர்கிறது வரலட்சுமி விரதம். செல்வ வளமும் சுபிட்சமும் வீட்டில் நிறையச் செய்யும் மகாலட்சுமி வழிபாடு இது. வரம் தரும் அன்னையாக ஸ்ரீ மகாலட்சுமியை வழிபட்டு பலன் பெற வரலட்சுமி நோன்பு எனும் இந்த விரதம் பெண்களுக்காகவே ஏற்பட்டது. வரலட்சுமி விரதத்தின் மேன்மையைச் சொல்லும் புராணக் கதைகள் பல உண்டு. […]

2017/08/04

நீர் நிலைகளை “கங்கை’ என்று போற்றுதல் மரபு. கங்கையின் நீர் எல்லா நீர்நிலைகளிலும் சேரட்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு புனிதநீராகக் கருதுவர் பெரியோர். அவ்வாறு, கங்கையினும் புனிதமானதாகக் காவிரி ஆழ்வார்களால் போற்றப்பட்டுள்ளது. ஆடிப் பெருக்கு உற்ஸவமும் காவிரியை மையமாகக் கொண்டே நடத்தப்படுகிறது. இருப்பினும் காவிரி அன்று அனைத்து நீர்நிலைகளிலும் பாய்வதாக எண்ணி நீர்நிலைக் கரைகளில் ஆடிப் பெருக்கு உற்ஸவத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆடி-18 அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவியும் புதுமண தம்பதிகள் பட்டு வேட்டி-பட்டுசேலை அணிந்து, திருமண […]

2017/08/03