astrology dinamani

கட்டுரைகள்

காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வரதராஜர் – மரகதம் தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர் சேஷாத்ரி சுவாமிகள். மூன்று வயதில், தெருவில் பொம்மை விற்றுச் சென்றவர் கூடையிலிருந்து ஒரு கிருஷ்ணர் பொம்மையை சேஷாத்ரி கையால் தொட்டு வாங்க, அடுத்த சில மணி நேரங்களில் அனைத்து பொம்மைகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாம். எனவே அன்றிலிருந்து அவரை “தங்கக் கை’ சேஷாத்ரி என்றே மக்கள் அழைத்தனர். வேதம், பாஷ்யம், ஸ்லோகம் போன்ற அனைத்தையும் சிறுவயதிலேயே கசடறக் கற்றுணர்ந்தார். அவரது மனம் உலகியலில் நாட்டம் கொள்ளாமல் ஆன்மிகத்திலேயே […]

2013/11/26

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிர்களும், வான் மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் காலச் சக்கரத்தின் ஆட்சிக்கு உட்பட்டவை. இந்தக் காலச் சக்கரத்தை இயக்குபவர் கால பைரவர். பிரம்மதேவனின் அகந்தையை அடக்க, சிவபெருமான் ஆணைப்படி ருத்திரர், கால பைரவர் உருக்கொண்டு, பிரம்மனின் ஐந்தாவது தலையைத் துண்டித்தார். நவகிரகங்கள் அனைத்தும் கால பைரவருக்குள் அடக்கம். நவகிரகங்களால் ஏற்படும் காலசர்ப்ப தோஷம், நாகதோஷம் முதலானவை நீங்க கால பைரவரை வழிபடுவது மிகச் சிறப்பு. பொதுவாக மக்களால் ஒதுக்கப்படும் அஷ்டமி திதியில் […]

2013/11/25

சிவஸ்வரூபமான காலபைரவருக்கு சிவன் ஆலயங்களில் தனி சந்நிதி உண்டு. பல்வேறு இடங்களில் தனி ஆலயங்களும் அமைந்துள்ளன. அவ்வகையில் தென் கயிலாயம் எனப் போற்றப்படும் திருவையாறுக்கு அருகில், காவிரியின் வடகரையின்பால் அமைந்திருக்கும் காலபைரவரின் திருக்கோயில் காசிக்கு நிகரானது என்று கூறப்படுகிறது. காசியம்பதியில் மணிகர்ணிகா கட்டத்தில் அமைந்திருக்கும் காலபைரவரின் கோயிலில், கங்கா நதியை நோக்கி தென்புறமாக பைரவர் அருள்பாலிக்கின்றார். தென்புறம் மயானம் உள்ளது. அதுபோன்றே வைரவன் கோயில் கிராமத்தில் அமைந்துள்ள பைரவரின் சந்நிதியும் காவிரி நதியை நோக்கி தென்புறம் பார்த்தவாறு […]

2013/11/25

கண் நோய் உள்ளவர்களும், அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் தூய உள்ளத்துடன் வணங்கி தீர்த்தம் பெற்றுச் சென்றால் தீராத நோயும் தீர்ந்து விடுகிறது. தேனி மாவட்டத்தில் வீற்றிருக்கும் வீரபாண்டி கௌமாரியம்மன்தான் இப்படி பக்தர்களின் குறைகளைத் தீர்க்கும் கண்கண்ட தெய்வமாக விளங்குகிறாள். ஆயுதமாக மாறிய அருகம் புல்: ஒரு அசுரனை வெல்வதற்காக உமாதேவி அம்சம் பெற்ற கௌமாரி அம்மன் அடர்ந்த காட்டில் தவமியற்றினாள். அசுரன் கௌமாரியைக் கண்டு தன் கைவாளை விட்டுவிட்டு அவளை சப்தமில்லாமல் தூக்கிச் செல்ல முயன்றான். இதை […]

2013/11/20

தஞ்சை மாவட்டம், திருவையாறில் உள்ள ஒத்தத்தெருவில் அகத்தியருக்கு தனிக் கோயில் உள்ளது. அகத்தியரோடு அவருடைய மனைவி லோபா முத்திரையும் இணைந்து அருள் பாலிக்கின்றனர்.  மூலவர் கருங்கல் விக்ரஹமாக நின்ற கோலத்தில் வீற்றிருக்கிறார். அகத்தியர்தான் காவிரியை மீட்டுத் தந்ததாக வரலாறு. சித்த வைத்தியத்திற்கும் இவரே தலைவர். அகத்தியரை வழிபட்டால் தீராத நோயும் தீரும். இதை மெய்ப்பிக்கும் வகையில் இக்கோயிலிலுள்ள அகத்தியர், கையில் சித்த மருத்துவக் குடுவையுடன் காட்சியளிப்பது சிறப்பு. உற்ஸவ மூர்த்தியும் இக்கோவிலில் உள்ளது. தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் […]

2013/11/20