astrology dinamani

கட்டுரைகள்

மதுரையைத் தலைநகராகக் கொண்டு திருமலை நாயக்கர் ஆட்சி செய்யத் தொடங்கிய பின்பு, மதுரைக் கோயில் நிர்வாகங்களைச் சீர்திருத்தி, எஞ்சியிருந்த அம்மன் கோயில் திருப்பணிகளை நிறைவு செய்தார். விசுவநாத நாயக்கர் காலத்தில் அமைச்சராக இருந்த அரியநாத முதலியார் அமைச்சராகக் கோயில் பணிகளைச் சீர்திருத்தியபோது, வெகு காலமாக திருமுறைப்பணி நின்றுபோயிருந்ததைப் புதுப்பிக்க எண்ணி, திருவாரூர் கமலை ஞானப்பிரகாசருக்கு ஓலை அனுப்பினார். கமலை ஞானப்பிரகாசர் தன் தங்கை சிவகாமி அம்மாள் மகன், அலங்கார ஓதுவாரை, அமைச்சர் வேண்டுகோளுக்கு இணங்கி, மதுரைக் கோயில் […]

2013/12/03

எல்லாம்வல்ல இறைவனுக்குப் பழைய தமிழ் நூல்களிலும் வட நூல்களிலும் வழங்கிய முக்கண்ணான், உருத்திரன் முதலான பல பெயர்கள் இருக்க, அவற்றுள் ஒன்றான “சிவன்’ என்னும் பெயர் மட்டும் ஏனைப்பெயர்கள் எல்லாவற்றினுள் சிறந்ததாக எடுக்கப்பட்டு முதல்வனுக்கு வழங்கலானதும், அப்பெயரின் வழியே முழுமுதற் கடவுளை வழிபடும் தமிழரது கொள்கை அல்லது மதம் “சைவம்’ எனப் பெயர் பெறலானதும் மிக்க பழமையுடைய தொன்றென்பதும் மற்றைப் பண்டை மக்களில் பலர் அச்சொல்லையே இறைவனுக்குச் சிறந்த பெயராக வைத்து வழங்கியவாற்றால் அறியப்படுகின்றது. ஏபிரேயர் தாம் […]

2013/12/02

மஹா விஷ்ணுவின் அம்சம் நிறைந்தது துளசி செடி. துளசி செடியை வீட்டின் பின்புறத்தில் ஒரு மேடை அமைத்து அல்லது பூந்தொட்டியில் வைத்து வழிபடலாம். துளசி செடியில் துளசி தேவியையும் பக்கத்தில் ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லி மர குச்சியையோ வைத்து அதில் மஹா விஷ்ணுவை ‘ஆவாஹனம்’ செய்து துளசி அமைந்துள்ள இடத்திற்கு அருகில் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி உட்கார்ந்து பூஜை செய்யலாம். பக்தியுடன் துளஸியை பூஜை செய்வதால் மன மகிழ்ச்சி, ஒற்றுமை, குடும்பத்தில் அமைதி, லக்ஷிமி […]

2013/11/30

மக்கள் அனைவரும் இல்லறத்தில் ஈடுபட்டாலும் ஆன்மிக ஞானம் பெற்று விழிப்புணர்வு அடைய வேண்டுமென்பதே இஸ்கான் என்ற அமைப்பின் கொள்கையாகும்.  அந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக ஆசியாவிலேயே மிகப் பெரிய கிருஷ்ணர் கோயிலை அந்த அமைப்புக் கட்டியுள்ளது. பெங்களூர் ராஜாஜி நகர் வெஸ்ட் ஆஃப் கார்ட் ரோடில் ஏழரை ஏக்கர் நிலப்பரப்பில் 35 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள “இஸ்கான்’ ஸ்ரீராதா கிருஷ்ணா கோயில்தான் அது. 1966-இல் “இஸ்கான்’ அமைப்பைத் தொடங்கிய பிரபு பாதா,  1977-ஆம் ஆண்டில் […]

2013/11/28

காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ளது திருமாகறல். இங்குள்ள திருமாகறலீஸ்வரர் ஆலயம் பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. பிரம்மர் தனக்கு ஏற்பட்ட தோஷத்திற்காக ஒவ்வொரு சிவ தலமாக சென்று பூஜை செய்த போது இங்கம் வந்து பூஜை செய்தார். பின்னர் புறப்படும் முன்பு ஆண்டு முழுவதும் காய்க்கும் அதிசயப் பலாமரம் ஒன்றை நட்டார். அந்த பலாமரம் நாள்தோறும் ஒரு பழம் வீதம் கொடுத்து வந்தது. அதன் சுவையும் பன்மடங்கு அதிகமாக இருந்தது. அந்த பகுதியை ஆண்ட ராஜேந்திர சோழன் […]

2013/11/27