astrology dinamani

கட்டுரைகள்

திருச்சிக்கு அருகே அமைந்துள்ள மிகப்பெரிய சிவன் கோயில் திருவானைக்காவல் திருக்கோயிலாகும். பஞ்ச பூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியதாக இத்தலம் விளங்குகிறது. அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர் உள்ளிட்டோரால் இத்தலம் பாடல் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இங்கு கோயில் கொண்டுள்ள மூலவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அம்பிகை அகிலாண்டேஸ்வரி என்ற திருநாமத்துடனும் விளங்குகின்றனர். இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் 1800 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது. பின்னர் பாண்டியர்களாலும் மதுரை நாயக்கர்களாலும் புதுப்பிக்கப்பட்டது. இந்த தலத்தை பற்றி புராணக் […]

2013/12/17

தமிழ் மாதங்களில் மார்கழி மாதம் தனிச்சிறப்பு வாய்ந்தது. “மாதங்களில் மார்கழியாகவும், நாட்களில் திருவாதிரையாகவும் விளங்குகிறேன்” என பகவான் கண்ணன் மார்கழியின் சிறப்பினை பகவத் கீதையில் போற்றுகிறான். பக்தி மயமாக விளங்குகிறது மார்கழி மாதம். அதிகாலை குளிரையும் பொருட்படுத்தாமல் திருக்கோயில்களில் திருப்பாவை- திருவெம்பாவை பாடல்களைப் பாடி இறைவனை வணங்குகின்றனர். வைணவக் கோயில்களில் மார்கழி மாதத்தில் சிறப்பான விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா நடைபெறுவது போன்று, சிவாலயங்களில் திருவாதிரை விழா நடைபெறுகிறது. இந்நன்னாளில் ஆடவல்லானாகிய நடராஜப் பெருமானுக்கு சிறப்பான அபிஷேகங்கள் […]

2013/12/16

மார்கழி – இறை வழிபாட்டுக்குரிய மாதம். மாணிக்கவாசகர் பாடிய திருவெம்பாவையும் மார்கழி நோன்பை அடிப்படையாகக் கொண்டதே. திருவண்ணாமலை பெருமானைப் போற்றிப் பாடிய பாடல்களே திருவெம்பாவை. இப்பாடல்களில் தன்னை ஒரு பெண்ணாகப் பாவித்து மார்கழி மாதக் காலையில் பெருமானைக் குறித்துப் பாடினார் மாணிக்கவாசகர். மார்கழி மாதம் தட்சிணாயனத்தின் இறுதி மாதம். தில்லைச் சிதம்பரத்தில் கோயில் கொண்ட நடராஜப் பெருமானைத் தரிசிக்க தேவர்கள் ஒன்று கூடுவராம். தேவர்களுக்கு இம்மாதம் அதிகாலைப் பொழுதென்பதால், வைகறையில் பெருமானை தரிசனம் செய்வது சிறப்பு. சைவர்களுக்கு […]

2013/12/16

வேளாண் மாவட்டமான கடலூரில், சுற்றுலா வாய்ப்புகள் மிகக்குறைவு. என்.எல்.சி. நிலக்கரிச் சுரங்கங்கள், பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள், பழமை வாய்ந்த கோயில்கள், வடலூர் சத்தியஞானசபை, கடலூர் சில்வர் பீச் ஆகியவை மக்கள் கண்டுகளிக்கும் இடங்களாக உள்ளன. எனினும் பிச்சாவரம் மாங்குரோவ் காடுகளும், சிதம்பரம் நடராஜர் கோயிலும் மட்டுமே சுற்றுலாத் துறையின் பட்டியலில் உள்ளன. தமிழக மக்களின் சுற்றுலாக்களில் கோயில்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. கோயிலுக்குச் செல்லாமல் எந்த சுற்றுலாவும் மனநிறைவைத் தருவதில்லை. பாண்டிய, சோழ மன்னர்கள் மற்றும் கிருஷ்ணதேவராயரால் […]

2013/12/16

காரைக்கால் மாவட்டத்தில் உள்ளது திருமலைராயன்பட்டினம். 108 கோயில்கள், 108 திருக்குளங்கள் உள்ள சிறப்பு பெற்ற தலம். இங்குதான் ஸ்ரீ ஆயிரங்காளியம்மன் அருள்புரிகிறாள். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறையே தரிசனம் தரும் ஆயிரங்காளியம்மனின் வரலாறு சுவாரஸ்யமானது. அம்பிகையை நினைத்து அருந்தவம் புரிந்தார் மன்னர் ஒருவர். அவருக்கு இரங்கிய அன்னை, “நான் ஒரு பெட்டியில் அவதரிப்பேன். என்னை எழுந்தருளச் செய்து வழிபடு” என்று சொல்லி மறைந்தாள். அவ்வாறே மன்னரும் ஒரு பெட்டியைக் கண்டெடுத்தார். அதில் அன்னையைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். அம்பாள் […]

2013/12/16