astrology dinamani

கட்டுரைகள்

ஒவ்வொரு கோயிலுக்கு ஒவ்வொரு தனிச்சிறப்பு இருக்கிறது. இன்ன தோஷத்திற்கு இன்ன தலத்தில் பரிகாரம் கிடைக்கும் என்று ஜோதிடர் கூறினால் நம்பிக்கையோடு அதனைச் செய்யுங்கள். கண்டிப்பாக பயன் கிடைக்கும். நள தமயந்தி சரித்திரத்தில், திருநள்ளாறு சென்று வழிபட்ட பிறகு தான் அவர்கள் வாழ்க்கை மீண்டும் இன்ப மயமானதாக தகவல் இருக்கிறது. எல்லா கோயில்களிலும் சனீஸ்வரன் இருந்தாலும், சனிக்கே தோஷம் ஏற்பட்டு அது விலகிய தலமாக திருநள்ளாறு விளங்குவதால் தனிச்சிறப்பைப் பெற்றிருக்கிறது. இதேபோன்று தான் ஒவ்வொரு பரிகாரத்திற்கும் ஒவ்வொரு தலம் […]

2013/12/14

ஸ்ரீ எதிராஜவல்லித் தாயார் சமேத ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த  மாம்பாக்கம் கிராமத்தில் உள்ளது. ஸ்ரீவைகுண்டத்தில் எழுந்தருளியுள்ளவர் ஸ்ரீமன் நாராயணன். இவர் உபநிஷத்துக்கள் கூறுவது போல “பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை’ என்கின்ற ஐந்து நிலைகளில் அருள் பாலிக்கின்றார். எனினும், அர்ச்சையில் (விக்கிரஹ வடிவில்)  ஆதவனைப்போல பிரகாசிக்கின்ற தன்னுடைய அருட் தன்மையினாலே, தன்னைச் சரணடைந்தவர்களுக்கு அருள் பாலிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். “தொண்டை மண்டலம் சான்றோர் உடைத்து’ […]

2013/12/14

சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் திருவாலங்காடு என்ற ஊரில் கோயில் கொண்டுள்ளார் வடாரண்யேஸ்வரர். இங்குள்ள அம்மன் வண்டார்குழனி என்ற திருநாமத்துடன் விளங்குகிறார். 12ம் நூற்றாண்டில் சோழ மன்னரால் கட்டப்பட்ட இந்த கோயில், சிவன் நடனமாடியபோது, அவரது அணிகலன்கள் பூமியின் 5 இடங்களில் விழுந்தன. அவற்றை 1. ரத்ன சபை, 2. கனக சபை, 3. ராஜாத சபை, 4. சித்ர சபை, 5. தாமிர சபைகள் என்று அழைப்பர். அதில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் தலம் […]

2013/12/13

கடவுள் படங்களின் முன்னால் அல்லது பூஜை அறையில் என்று தினமும் இல்லங்களில் விளக்கு ஏற்றப்படுகிறது. விளக்கு ஒளி, அகன்ற அறிவைக் காட்டுவது. இருள் அறியாமையைச் சுட்டுவது. கடவுள் என்பவர் பேரறிவாளர். அறிவின் மூலம். அவரே அறிவு கிடைப்பதற்கான மார்க்கம். நாம் அறிவினைப் பெறுவதற்கான தூண்டுகோல். நம் அறிவுச் சுடரை ஏற்றுபவரும் அவரே. எனவே, ஒளியை உமிழக்  கூடிய விளக்கினை ஏற்றுவது என்பது, அறிவை நல்கும் ஆண்டவனை வழிபடுவது என்பதாகும். விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் […]

2013/12/13

வேதமே, மலையாய் இருப்பதால் ‘வேதகிரி’ எனப் பெயர் பெற்றது. வேதாசலம் கதலிவனம் கழுக்குன்றம் என்பன இத்தலத்துக்குரிய வேறு பெயர்கள். மலைமேல் ஒரு கோயில் உள்ளது.  ஊருக்குள் ஒரு கோயில் உள்ளது. இவை முறையே மலைக்கோயில் தாழக்கோயில் என்றழைக்கப்படுகின்றன. மலையில் தினமும் உச்சிப்பொழுதில் கழுகு வந்து உணவு பெற்றுச் செல்லுவதால் இதற்குப் ‘பட்சி தீர்த்தம்’ என்று பெயர். மலைமீது உள்ள கோயிலில் வீற்றிருந்தருளும் இறைவன் – வேதகிரீஸ்வரர் (சுயம்பு மூர்த்தி), இறைவி – சொக்கநாயகி. இங்கு சுனை ஒன்றும் […]

2013/12/12