astrology dinamani

கட்டுரைகள்

ஈசன் அக்னி உருவாகத் திகழ்வது திருவண்ணாமலைத் தலம் என்பது தெரியும். அது போல், தவமிருந்த அம்பிகைக்கு அக்னிப் பிழம்பாகவே ஈசன் காட்சி அளித்த தலம் ஒன்று உண்டு. அது தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ள திருக்கானூர் தலம். ஒரு முறை அம்பிகை சிவபெருமானை நோக்கித் தவமிருக்க தகுந்த இடத்தைத் தேடினார். பூமியில் கரும்புகள் அதிகம் வளர்ந்திருந்த இக்ஷீவனம், தவத்துக்குத் தகுந்த இடமாகத் தோன்றியது. அங்கேயே அமர்ந்து தவமிருந்தார் அம்பிகை. தவத்தால் […]

2014/01/28

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டத்தில் உள்ளது 12 புத்தூர். ஆற்காடு-ஆரணி வழியில் தாமரைப்பாக்கம் என்ற ஊரிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வடமொழி வல்லுனர்கள் பலர் வாழ்ந்த முள்ளண்டிரம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. இத்தலத்தில் அட்சரவல்லி சமேத ஸ்ரீவித்யாபதீச்வரர் அருள்கிறார். ஸ்ரீவித்யாபதீச்வரர்: ஸ்ரீவித்யாபதீச்வரர் எல்லா கலைகளுக்கும், வித்தைகளுக்கும் அதிபதி. எழுத்து வடிவில் அருளும் அம்பிகை அட்சரவல்லி, சிவபெருமானிடம் உபதேசம் பெற்றவள். இத்தலத்து இறைவனையும் இறைவியையும் வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம். அருணகிரிநாதர்: அருணகிரிநாதர் […]

2014/01/28

பித்ரு தோஷத்தைத் தீர்க்க ஒருவர் மிகவும் சக்தி வாய்ந்த திலா ஹோமத்தை செய்ய வேண்டும். தில் என்றால் எள் என்று பொருள். எள்ளைக் கொண்டு செய்யப்படும் திலா ஹோமம் செய்வதால், நமது முன்னோர்களின் ஆத்மாக்கள் சாந்தி அடையும். ஒருவர் தனது வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே திலா ஹோமம் செய்யலாம். அதையும் முறைப்படி செய்ய வேண்டும். ஒருவர் செய்யும் திலா ஹோமத்தால், அவரது வருங்கால சந்நதிகளுக்கும் பலன் கிடைக்கிறது. ஒருவர் தனது ஜாதகத்தை ஜோதிடரிடம் அளித்து, பித்ரு […]

2014/01/27

மாதா, பிதா, குரு, தெய்வம் என்கிறது வேதம். பெற்றோர்களைக் கவனிக்காதவர்களையும், அவர்களை முதிய வயதில் பராமரிக்காதவர்களையும், காலஞ்சென்ற பிறகு உரிய சிரார்த்தங்களைச் செய்யாதவர்களையும் கடுமையாக கண்டிக்கின்றன வேத நூல்கள். இத்தகைய பிதுர் சாபங்களை ஏற்ற குடும்பங்களில் கஷ்ட ஜீவனமும், சுபகாரியத் தடைகளும் நேரிடும் என ஜோதிட நூல்களும் குறிப்பிடுகின்றன. ஆனால் இத்தகைய தோஷத்திற்கு பரிகாரத் தலம் உள்ளது. செங்கற்பட்டு மாவட்டைச் சேர்ந்த நென்மேலியே அந்த தலம். இங்கு எழுந்தருளும் ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள் பித்ரு தோஷத்தை நீக்குபவராக […]

2014/01/27

“சே’ என்றால் மாடு என்று பொருள். அதனால் சேவூரில் ஆட்சி செய்யும் இறைவனை ஆன்மிக சான்றோர் “மாட்டூர் அரவா’ என்றே போற்றுகின்றனர். மேலும் “சேவூர்’ கொங்கு நாட்டின் தலைநகர் என்பதை இத்திருக்கோயில் வரலாறு மூலம் அறியலாம். வாலி தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, சேவூரில் சிவலிங்கம் அமைத்து வழிபட்டான். வாலி பிரதிஷ்டை செய்த காரணத்தால் இறைவன் “வாலீஸ்வரர்’ என்ற திருநாமத்தால் அழைக்கப்படுகிறார். மேலும் கிஷ்கிந்தாவை இழந்த வாலி, வாலீஸ்வரரை பூஜித்த பின்பே மீண்டும் கிஷ்கிந்தாவை கைப்பற்றியதாக […]

2014/01/25