astrology dinamani

கட்டுரைகள்

கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநறையூர். இங்குள்ள பெருமாள் இடர்கடுத்த திருவாளன் என்ற பெயரோடும், தாயார் வஞ்சுளவல்லி, நம்பிக்கை நாச்சியார் என்றும் அழைக்கப்படுகின்றனர். கருவறைக்கு மேல் உள்ள விமானமும் கோபுரம் போன்றே அமைந்திருப்பது அரிதானது. 16 கோபுரங்களைக் கொண்ட, இராஜகோபுரம் 5 அடுக்குகளும், 76 அடி உயரமும் உடையது. கல் கருடன்: இங்குள்ள கல் கருடன் மிகவும் சிறப்பானது. கருடன் வாகன மண்டபத்துக்குப் புறப்படும் சம்யம் இவர் திருப்பாதத்தை நான்கு பேர் […]

2014/02/25

சென்னை,  திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது மருந்தீஸ்வரர் ஆலயம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். நோய் நொடியைப் போக்கி ஆரோக்கியம் தந்தருளும் மருத்துவராக, திருவான்மியூர் மருந்தீஸ்வரர் விளங்குகிறார். தல வரலாறு: வசிஷ்டர் செய்த சிவபூஜையின் பயனாக, இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அவருக்கு பரிசாக அளித்தான். ஒருமுறை, பூஜை நேரத்தில், காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்தது. இதனால், கோபம் கொண்ட வசிஷ்டர், அதைக் காட்டுப்பசுவாக போகும்படி சபித்தார். கலங்கிய காமதேனு, தனக்கு விமோசனம் அளிக்க […]

2014/02/25

சோழர்களின் தலைநகராக இருந்தது உறையூர். இங்கே தர்மவர்மாவின் வம்சத்தில் பிறந்த மன்னன் நந்தசோழன் அரங்கனடிமை பூண்டு ஒழுகினான். புத்திரப்பேறு இல்லாத பெரும் குறை அவனுக்கு. அரங்கநாதனே பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தான். அரங்கன் கணக்கோ வேறாக இருந்தது. திருமகளை நந்தசோழனுக்கு புத்திரியாகப் பிறக்குமாறு கடைக்கண் காட்டினான். உறையூரில் தாமரை ஓடையில் பூத்த தாமரைப் பூவில் குழந்தையாகச் சிரித்தாள் ஸ்ரீதேவி. வேட்டைக்குச் சென்றிருந்த நந்தசோழனுக்கு ஆச்சரியம். குழந்தையைக் கையில் எடுத்தான். மனம் நிம்மதி அடைந்தது. கமல மலரில் கண்டெடுத்ததால் […]

2014/02/24

திருச்சி மாவட்டத்தில், சோமரசம்பேட்டை என்னும் கிராமத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருப்பெருமுடி பரமேஸ்வரர் ஆலயம். கி.பி. 969ல் சுந்தர சோழனால் கட்டப்பட்டது. அதன்பின் பொய்சள மன்னன் வீரராமநாதன் காலத்தில் திருப்பணி நடைபெற்றது. அப்போது விஜயநகர மன்னன் விருப்பண உடையார் கனவில், திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி அம்மன் தோன்றி, “இத்தலத்தில் எனக்கு சந்நிதி அமைப்பாயாக’ என்று கூறி மறைந்தாள். விருப்பணனும் அம்மனின் விருப்பத்தை ஏற்று இங்கு அம்மன் சந்நிதி அமைத்தார் என இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகள் கூறுகின்றன. அகத்திய மாமுனிவரால் […]

2014/02/22

பதுமநிதி, மகா பதுமநிதி, மகாநிதி, கச்சபநிதி, முகுந்த நிதி, குந்த நிதி, நீலநிதி, சங்கநிதி ஆகிய எட்டு வகையான நிதிச் செல்வங்களுக்கும் தலைவன் குபேரன். எனவே அவனுக்கு “நிதிபதி’ என்ற பெயரும் உண்டு. குபேரன் வழிபட்டு வரம் பெற்றதாலே அன்னம்புத்தூர் கிராமத்தில் அருளும் ஈசனுக்கு “ஸ்ரீநிதீஸ்வர்’ என்ற பெயரும் ஏற்பட்டது. அடிமுடி காணா அண்ணாமலையில் ஈசனின் முடியைக் கண்டதாக கூறியதால் ஏற்பட்ட இழுக்கு தீர “நான்முகன்’ இத்தலத்தில் தங்கி வழிபட்டு பரமனின் அருளைப் பெற்றார். “அன்னமூர்த்தி’ “அன்ன […]

2014/02/22