astro_dinamani

கட்டுரைகள்

சுகபோக வாழ்வு என்பது, அவர்கள் முற்பிறவியில் செய்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப அமைகின்றது. இதனை யாரும் மறுக்க முடியாது. ஏழை, பணக்காரர் என்பதைவிட, எப்போதும் சுகபோக வாழ்வு அனுபவிப்பதை ஜாதக அமைப்புகள் நிர்ணயிக்கும். எந்த லக்னத்தில் பிறந்தவராக இருந்தாலும், லக்னத்தின் அதிபதி, இரண்டாம் வீட்டிற்குரிய அதிபதி, ஒன்பதாம் வீட்டிற்குரியவர், சந்திரன் ஆகிய நான்கு கிரகங்களில் எந்தக் கிரகமாவது ஆட்சி, உச்சம் பெற்று மூன்றாம் இடத்துக்குரிய கிரகத்துடன் சேர்ந்து சுப ராசியில் அமர்ந்தால், அந்த ஜாதகர் மிகவும் ஒழுக்கம் […]

2017/08/16

மகிமையை உணர்த்திய ஸ்ரீகிருஷ்ணர் அஷ்டமி திதியில் அவதரித்தவர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. இந்நாளில் மக்கள் வீடுகளை அலங்கரித்து கண்ணனின் பாதங்களை வரைந்து அலங்கரிப்பர். மனித வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்திய ஸ்ரீகிருஷ்ண பகவானின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்வோம். கிருஷ்ணருக்கு ஏன் துளசி மிகவும் பிடிக்கும்? திருமால் தன் மனைவி லட்சுமியுடன் வைகுண்டத்திலுள்ள நந்தவனத்தில் உலா வருவார். அங்கு மலர் செடிகளுக்கு நடுவே ஒரு துளசி செடி இருக்கும். அவற்றைப் பார்த்துக் கொண்டே […]

2017/08/14

மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த தினமே கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தேவகிக்கும்-வசுதேவருக்கும் பிறக்கும் குழந்தையால் அண்ணன் கம்சன் உயிருக்கு ஆபத்து என்று கம்சனின் கனவில் அசரீரி ஒன்று ஒலித்ததாம். இதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கம்சன் தன் உயிர் முக்கியமா, தங்கை மீதான பாசம் முக்கியமா? என்று வரும் போது இறுதியில் தன் உயிர் தான் முக்கியம் என்று முடிவு செய்தான். உடனே தேவகியை கொன்றுவிட முடிவு செய்தான் கம்சன். வாளை ஓங்க முற்பட்டான். கம்சா! நிறுத்து […]

2017/08/14

• சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வான சந்திர கிரகணம் இன்று இரவு நிகழ இருக்கிறது. இன்று இரவு தோன்றும் சந்திர கிரகணம் ஏறத்தாழ 2 மணி நேரம் நீடிக்கும். சந்திர கிரகணம் கேதுவால் பிடிக்கப்படுவதால் பரிகாரம் அவசியம் என்று ஜோதிட ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மேலும் உணவு பொருட்களில் கிரகண கதிர்கள் தாக்காவண்ணம் தர்பையை (அருகம்புல்) போட்டுவைப்பதும் மரபு. • கர்ப்பிணி பெண்கள் இன்றைய சந்திர கிரகணத்தை பார்க்க கூடாது. மற்றவர்கள் கிரகணம் […]

2017/08/07

ஆடி மாதத்தில் இருந்துதான் விரதங்கள், பண்டிகைகள், உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாகத் தொடங்குகிறது. இந்த மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவுக்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்மன், அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். கச்யபர், அத்ரி, பரத்வாஜர், விஸ்வாமித்திரர், கவுதமர், ஜமதக்னி, வசிஷ்டர் ஆகியோரே சப்த ரிஷிகளாவர். இந்த எழுவரும் சிவனிடமிருந்து சில யோகாபயிற்சிகளை […]

2017/08/07