எண் ஜோதிடம்

மரகதக் கல்லின் ஆங்கிலப் பெயர் எமரால்ட்.  இது, வெளிர் பச்சை மற்றும் அடர்பச்சை நிறத்தில் இருக்கும். இக்கல்லை அணிவதால் நல்ல மனோபலமும், எதையும் திட்டமிட்டு செய்யும் ஆற்றலும் கிடைக்கும். கற்பனை வளத்தை பெருக்கக்கூடிய சக்தி உடையது. ஞாபக சக்தியை அதிகரிக்க செய்யும். கல்வியில் சிறந்து விளங்கலாம். செய்வினை பாதிப்புகள் இருக்காது. மரகதம் அணிவதால் மற்றவர்கள் மீது அன்பு அதிகரிக்கும். நல்ல பேச்சாற்றலை வளர்க்கும். …

வைரம் அதிக கடினத்தன்மை வாய்ந்தது என்பதால், வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும். கரும்புள்ளிகள் இல்லாத வைரமே சிறந்த வைரமாகும். வெண்மையான வைரம் வெற்றியையும் செல்வ செழிப்பினையும் தரும். சிவப்பு ஒளி தரும் வைரம், அரசியலில் உயர் பதவிகளை வகிக்கும் ஆற்றலை கொடுக்கும். உடல், உரம், மன உரம், வெற்றி, செல்வம், அதிஷ்டம், நட்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது வைரம். தன்னம்பிக்கையை வளர்க்கும். …

நவரத்தினங்களில் ஒன்றாக விளங்கும் நீலம் அலுமினியம் டிரை ஆக்ஸைடு என்ற மூலப் பொருளால் ஆனது. இக்கல்லுக்கு நீல நிறத்தைத் தருவதற்கு டைட்டானியம் என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. நீலம் கடினத்தன்மை அதிகமுடையதாக இருப்பதால் நீண்ட நாட்களுக்கு, பளபளப்பு குன்றாமல் இருக்கும். ஞானம், சாந்தம், பெருந்தன்மை, நற்பழக்கம், ஆழ்ந்தகவனம் ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டது நீலம். திருஷ்டியை தடுக்கும். தீமைகளில் இருந்து காக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பைப் …

நவரத்தினங்களில் ஒன்றாக கோமேதகம் விளங்குகிறது. இது காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். சிலது, தேனின் நிறமுடையதாகவும் இருக்கும். பழங்கால நூல்களில் கோமேதகம் கோமூத்திரம் என்று கூறப்படுகிறது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்கு கோமேதகம் என்று பெயரிட்டனர். தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான, எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் …

செவ்வந்திக்கல்லை அணிந்து கொண்டால் மனம் ஒருமுகப்படும். தியானம் செய்ய பெரும் துணைபுரியும். இக்கல்லை அணிந்தால் போதைப்பழக்கத்திலிருந்து விடுபடுவர். அடிக்கடி தொலைதூரப் பயணம் செல்பவர்களுக்கு நல்ல பாதுகாப்பைக் கொடுக்கும். தீய ஆவிகளின் தொல்லைகளை விரட்ட உதவும் கல் இது. முக்கியமாக வியாபாரிகள், அரசியல் தொடர்புள்ளவர்கள், சனி பகவானின் பிடியில் சிக்கி துன்பப்படுகின்றவர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினரும் ஜாதக ரீதியாக அணிய வேண்டிய கல்லுடன், இதையும் …

1 2 3 4 11