astro_dinamani

ஆன்மிக விளக்கங்கள்

மாதங்களுள் மார்கழி மாதமாக நான் இருக்கிறேன் என்று பகவான் கீதையில் சொன்னாலும், அதற்கு முன் மாதமான கார்த்திகை மாதத்திலேயே பகவானுடைய பூஜைக் கார்த்திகை மாதமே உகந்த மாதமாக ஆகிறது. கார்த்திகை மாதத்தில் அதிகாலையில் ஸ்நானம் செய்வது மிகவும் உகந்தது. அதிலும் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் விடியற்காலை ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷம். ஞாயிறுக்கு அடுத்த ஒவ்வொரு கார்த்திகை சோமவாரமும் சிவபூஜைக்கு விசேஷமாக சொல்லப் பட்டிருக்கிறது. எப்படி சிவராத்திரி இரவு பூஜை விசேஷமோ, அப்படி கார்த்திகை மாதம் பகல் […]

2013/11/16

சில நூற்றாண்டுகளுக்கு முன்னர்… பால் வியாபாரி ஒருவர். தான் வளர்க்கும் பசு மாடுகளை தினமும் சில மணி நேரம் மேய்ச்சலுக்கு விடுவார். அவை மாலை நேரம் ஆனதும் கொட்டிலுக்குத் திரும்பும். ஒருநாள், இவ்வாறு மேய்ச்சலுக்குச் சென்று திரும்பும் பசு மாடு ஒன்று பால் குறைவாகக் கொடுப்பதை அறிந்து, யாரோ இந்தப் பசுவின் பாலைத் திருடுவதாகவே எண்ணினார். அதனைக் கண்டுபிடித்து சரி செய்ய முடிவு செய்தார். பின்னர், தொடர்ந்து அந்தப் பசுவின் நடமாட்டத்தைக் கண்காணித்தார். ஒருநாள்… மேய்ச்சலுக்கு கூட்டத்துடன் […]

2013/11/16

மகாபலிச் சக்கரவர்த்தி. பெயர் பெற்ற அசுர அரசன். அவன் முற்பிறவியில் எலியாகப் பிறந்திருந்தான். தான்அறியாமலேயெ தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெயைக் குடித்து வரும்போது, திரியைத் தூண்டி வந்தது அந்த எலி. இதனால், கருவறையில் சர்வ காலமும் விளக்கு பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலேயே எலியாய்ச் செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவி எடுத்தது எலி. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற […]

2013/11/13

புராண காலந்தொட்டே பயம் கலந்த பத்தியோடு பார்க்கப்படுபவர்.  இல்லை வணங்கப்படுபவர். சனி என்றாலே தர்மத்தின் தலைவன் என்று பொருள். தர்ம தேவனின் தூதுவன் என்று பொருள். விதிரரோடு தர்மரும், யமனோடு சனியும் தர்மதேவதையின் மறு வடிவமாகவே இருக்கிறார்கள். நல்ல மனமும், வள்ளல் குணமும் இருந்தாலும், கண்டிப்பபும் தேவைப்படால் தண்டிக்கவும் துணிந்தவர். எளியவர் வலியவர் பார்ப்பதில்லை, ஏழை பணக்காரன் பேதமில்லை, அனைவருக்கும் ஒரே நீதி…. அது சமநீதி என்ற தத்துவ கோட்பாட்டில் இருந்து சற்றும் விலகாதவர். கர்மவினைப் பலனை […]

2013/11/10

சிவனுக்கு உகந்தது சிவராத்திரி. அவர் தம் தேவியர்க்கு உகந் தது நவராத்திரி. ‘நவம்’ என்ற சொல்லுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ‘நவ நவமாய் பெருகும்’ என்று ஆன்றோர்கள், சான்றோர்கள் கூறுவார்கள். நவக்கிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள், நவயோகங்கள், நவரசங்கள், நவபாஷாணங்கள், நவகற்பங்கள், நவமேகங்கள், நவநிதிகள் என ஒன்பதின் பெருக்கத்தை விசேஷமாக கூறுவார்கள். அந்த வகையில், நாடு முழுவதும் ஒன்பது நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படும் நவராத்திரி பண்டிகை சிறப்பானதாக கருதப்படுகிறது. புரட்டாசி மாதம் அமாவாசைக்கு பிறகு பூர்வ பட்ச பிரதமை […]

2013/10/18