astro_dinamani

ஆன்மிக விளக்கங்கள்

திருப்போரூர் கந்தசாமி கோயிலில், ஐம்பொன்னால் ஆன சோமாஸ்கந்தர் சிலை 60 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பக்தர்களின் வழிபாட்டுக்காக வைக்கப்பட்டது. கந்தசாமி கோயில் நிர்வாகத்தினரால் பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த இந்த சிலை மாயமாகிவிட்டதாக கடந்த ஜனவரி மாதம் தகவல் பரவியது. இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் கோயிலில் ஆய்வு செய்தனர். அப்போது, சோமாஸ்கந்தர் சிலை பத்திரமாக இருந்ததும், மாயமாகி விட்டதாக கூறப்படும் தகவல் வதந்தி என்பதும் உறுதியானது. இந்நிலையில், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் வீரசண்முக […]

2017/06/15

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும். இத்தலத்து முருகப்பெருமான் ஆண்டிக் கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பழனி முருகப்பெருமான் கோயிலை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அரிய சில தகவல்கள்….. • தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்களை மட்டுமே உபயோகிக்கப்படுத்துகின்றன. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி ஆகியவையாகும். பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகப்படுத்தப்படுகிறது. இவற்றில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் […]

2017/06/14

கடவுளை நம்பினோர் ஒருக்காலும் கைவிடப்படார் என்ற பழமொழியை இந்தச் சம்பவம் உண்மையாகியுள்ளது.  வங்கியில் பணிபுரியும் எழுத்தாளர் சரவண குமார் அவர்களின் முகல்நூல் பதிவு இது. ஓய்வு பெற்ற காவல்துறை எஸ்.பி ஒருவரிடம் பேசும் போது கடவுள் மேல் அவர் வைத்திருந்த அபாரமான பக்தி எப்படி அவரது உயிரைக் காப்பாற்றியது என்பதை விவரித்த போது, கேட்டதும் மெய் சிலிர்த்துப் போனோம். ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக சென்னை வந்திருந்தார். அப்போது அவருடைய செக்யூரிட்டி ஆபீஸராக நியமிக்கப்பட்டிருந்தேன். ஒரு மாதத்திற்கு […]

2017/06/12

யாருக்குத் தான் போராட்டமில்லாத, துன்பமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசை இருக்காது, நம் அனைவருமே நல்ல பெயருடனும், புகழுடனும், செல்வத்துடனும் வாழத் தான் விரும்புவோம். ஆனால் பலருக்கும் அது வெறும் கனவாகவே அமைந்துவிடும். மேலும், நாம் பிறந்த நேரம், நாள், ராசி போன்றவை நம் ஒவ்வொருவரது வாழ்க்கையையும் மாற்றி அமைக்கிறது. அதில், சிலர் வெற்றியை எளிதாகவும், சிலர் மிகவும் கடுமையாக பாடுபட வேண்டியதாகவும் இருக்கும். ஆனால், நம் புனித நூல்கள் ஒருவரது பெயர், புகழ், செல்வம் […]

2017/06/09

திருமண வைபவங்களின் போது மணமகன் மணமகளின் கழுத்தில் மாங்கல்யம் கட்டுதல் என்பது தொன்றுதொட்டு வரும் சடங்காகும். திருமணம் நிகழும் போது ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு பெண்ணுக்கு அணிவிப்பது ஏன்? அதன் தாத்பரியங்கள் என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம். சங்க காலத்தில் நடந்த திருமணங்களில் மணப்பெண்ணை வாழ்த்தி அவள் விரும்பிய மணவாளனுடன் அவளை ஒப்படைக்கும் போது அதற்குச் சாட்சியாக கட்டப்பட்டதே திருமாங்கல்யம். திருமாங்கல்யச் சரடுக்கு “தாலம்” என்ற மற்றொரு பெயரும் உண்டு. பின்னாளில் இது தாலியாக மாறியது. […]

2017/06/09