astrology dinamani

ஆன்மிக விளக்கங்கள்

வில்வ மரத்தில் லட்சுமி வாசம் செய்கிறாள். ஒரு வில்வ தளம் லட்சம் தங்க மலர்களுக்கு சமமாகும். ஒரு வில்வ தளத்தை சிவனுக்கு அர்ப்பணித்தால் சகல பாவங்களும் நீங்கி அனைத்து நன்மைகளும் உண்டாகும். அவ்வளவு மகிமை வாய்ந்த வில்வ தளத்தை சில நாட்களில் பறித்தால் பாவம் ஏற்படுவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. எந்த நாட்களில் வில்வ தளத்தை பறிக்கக் கூடாது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்…… மாதப்பிறப்பு, திங்கட்கிழமை, அமாவாசை, பௌர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி ஆகிய நாட்களில் வில்வத்தைப் […]

2017/08/19

மகாவிஷ்ணு கிருஷ்ணராக அவதரித்த தினமே கிருஷ்ண ஜென்மாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது. தேவகிக்கும்-வசுதேவருக்கும் பிறக்கும் குழந்தையால் அண்ணன் கம்சன் உயிருக்கு ஆபத்து என்று கம்சனின் கனவில் அசரீரி ஒன்று ஒலித்ததாம். இதைக் கேட்டு திடுக்கிட்டு எழுந்த கம்சன் தன் உயிர் முக்கியமா, தங்கை மீதான பாசம் முக்கியமா? என்று வரும் போது இறுதியில் தன் உயிர் தான் முக்கியம் என்று முடிவு செய்தான். உடனே தேவகியை கொன்றுவிட முடிவு செய்தான் கம்சன். வாளை ஓங்க முற்பட்டான். கம்சா! நிறுத்து […]

2017/08/14

நீர் நிலைகளை “கங்கை’ என்று போற்றுதல் மரபு. கங்கையின் நீர் எல்லா நீர்நிலைகளிலும் சேரட்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டு புனிதநீராகக் கருதுவர் பெரியோர். அவ்வாறு, கங்கையினும் புனிதமானதாகக் காவிரி ஆழ்வார்களால் போற்றப்பட்டுள்ளது. ஆடிப் பெருக்கு உற்ஸவமும் காவிரியை மையமாகக் கொண்டே நடத்தப்படுகிறது. இருப்பினும் காவிரி அன்று அனைத்து நீர்நிலைகளிலும் பாய்வதாக எண்ணி நீர்நிலைக் கரைகளில் ஆடிப் பெருக்கு உற்ஸவத்தைக் கொண்டாடுகிறார்கள். ஆடி-18 அன்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் குவியும் புதுமண தம்பதிகள் பட்டு வேட்டி-பட்டுசேலை அணிந்து, திருமண […]

2017/08/03

ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர் என்கிறது புராணம். ஒரு சமயம் பார்வதி தேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கைப் பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள். பிறகு பார்வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர்ந்தார். தன்னை நோக்கி வந்தவள் பார்வதி அல்ல என்பதை அறிந்த சிவபெருமான், […]

2017/07/29

தமிழ் மாதங்களில் “ஆடி’க்கும், “மார்கழி’க்கும் தனிப் பெருமை உண்டு. இவ்விரு மாதங்களையும் இறை வழிபாட்டிற்காகவே நம் முன்னோர்கள் அமைத்தனர். இறைவனின் திருவிழா வைபவங்களுக்கென்றே இரண்டு மாதங்களும் என்பதால், இந்த மாதங்களில் திருமண வைபவத்தைத் தமிழ் மக்கள் நடத்துவதில்லை. அதிலும் ஆடி மாதத்தில் அம்பிகைக்கும், அவளுடைய குமரன் முருகனுக்கும் கோயில்களில் கோலாகலமாகத் திருவிழா நடக்கும். அந்த வகையில், ஆடிக் கிருத்திகை அழகென்ற சொல்லுக்கு முருகா என்று போற்றப்பட்ட ஆறுமுகப் பெருமானுக்கு அணி சேர்க்கும் முக்கியத் திருவிழா. சூரபத்மாதியர் செய்த […]

2017/07/19