astrology dinamani

Articles by பார்வதி அருண்குமார்

இன்று செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷத்தை ருணவிமோசன பிரதோஷமாக அனுஷ்டிக்கப்படுகிறது. அதிலும் கார்த்திகை மாதத்தில் வரும் பிரதோஷம் என்றாலே மிகவும் விசேஷம் தாங்க! பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். ஸர்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு பிரதோஷ காலம். உலகைக் காப்பதற்காக ஆலகால விஷத்தை அருந்திய காலம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். […]

2018/12/04

மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது இந்த ஸ்லோகத்தைச் சொல்லலாம்…… கரம் தக்ஷிணம் ஞான முத்ராபிராமம் வரம் வாமஹஸ்தம் ச ஜாநூபரிஸ்தம் வஸந்தம் சதா யோக பட்டாபிராமம் பஜே சம்பு விஷன்வோஸ் ஸுதம் பூதனாதம். பொருள் : வலது கரத்தால் ஞான முத்திரை காட்டி அருள்பவனே! தொடை மீது வைத்திருக்கும் இடக்கரத்தால் வரதமுத்திரை காட்டுபவனே! மார்பில் மின்னும் யோக பட்டத்துடன் காட்சியருள்பவனே! பு+தங்களின் நாதனாக திகழ்பவனே! ஹரிஹரபுத்திரனே! அய்யப்ப ஸ்வாமியே, உன்னை வழிபடுகிறேன்!!! […]

2018/11/24

சனிப்பெயர்ச்சி இரண்டரை ஆண்டுகளுக்கொருமுறை நடைபெறும். சனி பகவானால் ஏற்படும் பாதிப்புகள் விலக திருநள்ளாறு பதிகத்தை தினமும் படித்து வாருங்கள். 1. போகம் ஆர்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம் பாகம் ஆர்த்த பைங்கண் வெள்ஏற்று அண்ணல் பரமேட்டி, ஆகம் ஆர்த்த தோலுடையன், கோவண ஆடையின்மேல் நாகம் ஆர்த்த நம்பெருமான், மேயது நள்ளாறே 2. தோடுடைய காதுடையன், தோலுடையன், தொலையாப் பீடுடைய போர்விடையன் பெண்ணும் ஓர் பாலுடையன் ஏடுடைய மேல் உலகோடு ஏழ்கடலும் சூழ்ந்த நாடுடைய நம்பெருமான், மேயது நள்ளாறே […]

2018/11/24

தீப வழிபாடு என்பது நம் கலாச்சாரத்துடன் இரண்டறக் கலந்தது ஆகும். நாம் வசிக்கும் வீட்டில் தினமும் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் தீபம் ஏற்றிவைத்து, அந்தத் தீபத்தை நமஸ்காரம் செய்தால், தீய சக்திகள் யாவும் விலகி வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும் என்கின்றன ஞான நூல்கள். வீட்டில் தீபம் ஏற்றி வைத்து வழிபடுவதால் சுபம், ஆரோக்கியம், நன்மை, தனவரவு அதிகரித்தல், நல்லபுத்தி ஆகியவை பெருகும். தீபங்களுக்கு என்று ஒரு வழிபாடு பின்பற்றப்பட்டு வருகிறது. அதாவது தமிழ் மாதத்தில் […]

2018/11/23

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். சிவனின் பஞ்சபூதத் தலங்களில் அக்னித்தலமான திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா  கடந்த நவம்பர் 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 7-ம் நாள் தேரோட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் மிகச் சிறப்பு வாய்ந்தது பரணி தீபம். இது பல்லாயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இத்திருவிழாவின் […]

2018/11/23