ggmn fgvm ,c

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு: நாயகர் கேது:

தீர்க்கமான எண்ணமுடைய 7ம் எண் வாசகர்களே இந்த மாதம் எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். அனுபவபூர்வமான அறிவுத்திறன் கை கொடுக்கும். மற்றவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான சில முக்கிய முடிவுகள் எடுக்க நேரிடும். பண்வரத்து நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. அடுத்தவரின் உதவி கிடைக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனை தலை தூக்கும். தம்பதிகளிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். பிள்ளைகள் உங்கள் ஆலோசனையை கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுக்கலாம். பெண்களுக்கு அனுபவபூர்வமான அறிவைக் கொண்டு எதையும் சாதிப்பீர்கள். வீண்வாக்குவாதங்களை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் அதிகரிக்கும்.

சிறப்பான கிழமைகள்: ஞாயிறு, புதன், வியாழன்

அனுகூலமான திசைகள்: வடக்கு, கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமைதோறும் அருகிலிருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்று அருகம்புல் மாலை சாற்றி வழிபடவும்.

Previous Post
Next Post

Leave a comment