astro_dinamani
கைரேகை சாஸ்திரத்தில் கிரகங்கள்!
2016/04/15

கைரேகை சாஸ்திரத்தில் கிரகங்கள்!

கைரேகையில் வலுவான புதன்மேடு அமைந்தால் சுயநல ஆதாரங்களுக்காக போராடுபவர். அரசியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகளில் ஈடுபாடிருக்கும். உடல் ரீதியிலும் மனரீதியிலும் வேகமானவர். ஆனால் செயல்பாடு நிதானமாக இருக்கும். வர்மக்கலைகளிலும் விருப்பம் கொண்டிருப்பார்.

புதனின் ஆதிக்கச் சக்தி கூர்மையான புத்தியையும் எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் வல்லமையையும் முக்கியமாக, வியாபார உலகில் சஞ்சரிக்கும் ஆவலையும் அளிக்க வல்லதாகும். மேலும் வாக்கு வன்மையுடன் பேச்சு வார்த்தை பரிவர்த்தனைகளில் சாமர்த்தியம் கொண்டவர். மனித விருப்பு வெறுப்புகளைப் புரிந்து கொண்டவர். வணிகத் திறன் கொண்டவர். ஒப்பந்தங்களை உருவாக்கவும் வளர்க்கவும் பிறரை நம்பவைப்பதிலும் சமயோசிதமாக நடந்து கொள்வதிலும் வல்லவர்.

சனி மேடு பற்றிய விவரம்
கடமை, திடசிந்தனை, பொறுப்புணர்வு ஆகியவற்றினை வளர்க்கும் ஆற்றல் கொண்டது. வலுவான சனி மேட்டின் தனித்தன்மைகளாவன: விவேக சிந்தனை மற்றும் கவனமாக காரியமாற்றுவர். ஒழுங்குமுறையான மற்றும் நெறி பிறழாத இயல்பானவர். முற்றிலும் உணர்ந்தறியும் ஆற்றலும் சாதனை திறனும் கொண்டவர். நம்பிக்கைக்கு உரியவர்.

சூரிய மேடு: சிறப்பான ஆதிக்கம் கொண்டவர்கள், தம்முடைய எண்ணங்களை சிந்தனைகளை பகிரங்கமாக வெளியிடத் தயங்க மாட்டார்கள்.
தனித்தன்மைகளாவன: எல்லையற்ற கம்பீரத்தைக் கொண்டிருப்பதும் ஆராய்ச்சிகளில் ஆர்வத்தையும் அனுபவிக்கும் சிந்தனையையும் தனித்துவ நிலைப்பாட்டையும் புகழார்வமும் கொண்டிருப்பார்கள்.

குருமேடு: கௌரவத்திற்கும் அடித்தளம் அமைக்கும் இந்த மேட்டுக்குரியவர்கள், இலக்கை நிர்மாணித்து அதனை அடைவதற்கான வேலைகளைச் சரியாகச் செய்வார்கள்.
சிறப்பம்சங்களாவன: சீரிய நோக்கும் தன்னம்பிக்கையும் திடமான எதிர்காலச் சிந்தனையும் தடுமாற்றமில்லாத போக்கும் விரிவாக்கத்திற்கும் விளைவிற்குமான கடின உழைப்பும் ஆவல் நிறைந்தவராகவும் இருப்பர்.

செவ்வாய்மேடு: காரிய சித்தியைத் திறமையாக எடுக்கவல்ல ஆற்றலை அளிப்பதாகும். தனித்தன்மைகளாவன: தன்னம்பிக்கையும் ஒளிவு மறைவற்ற மனப்பாங்கும் ஆர்வமும் செயல்திறனும் மிகுந்த சுறுசுறுப்பும் உடையவர்கள். இவர்கள் சாதனையாளர்கள்.

Previous Post
Next Post

Leave a comment