ஸ்திரீகளுக்கு எவ்விதம் கற்பு அவசியமோ, அவ்விதமே புருஷர்களுக்கும்….

ஸ்திரீகளுக்கு எவ்விதம் கற்பு அவசியமோ, அவ்விதமே புருஷர்களுக்கும்….

• சதுர்முக பிரம்மதேவரைக் கொண்டு பகவான் உலகில் அனைத்து ஜீவராசிகளையும் படைத்தார். அப்போது அவர், மனிதப்பிறவியில் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனியாக, அவரவர்களுக்கென்று சில தனித்திறமைகளை அளித்தருளியதுடன், மனிதகுலம் சுபிட்சமாக இருப்பதற்கு, பெண்களுக்கென்று சில கடமைகளையும், ஆண்களுக்கென்று சில கடமைகளையும் நிர்ணயம் செய்தார். ஆதலால் பெண்களும் ஆண்களும் அவரவர்களுக்குரிய கடமைகளைத்தான் செய்ய வேண்டும். மாறிச் செய்தால், மிகவும் விரைவிலேயே அது சமுதாயத்தைப் பெரிய அளவில் பாதிக்கும்.

– ஸ்ரீ சம்மோஹனகிருஷ்ண ஸ்லோகத்தை உலகிற்கு அளித்தருளிய மரீசி மகரிஷி

• ஸ்திரீகளுக்கு எவ்விதம் கற்பு அவசியமோ, அவ்விதமே புருஷர்களுக்கு ஒழுக்கம் அவசியம். திருமணமான பெண் தன் மனதால்கூட பிற ஆடவரைத் தன் கணவரைவிட உயர்ந்தவராக நினைத்தால், அந்தக் கணமே அவள் தன் கற்புநெறியிலிருந்து தவறியவள் ஆகிவிடுகிறாள். அது போலவே, பிற ஸ்திரீகளைத் தன் மனைவியின் அழகுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, அவர்களை மனதால் நினைப்பது,  ஸ்பரிசிப்பது ஆகியவை அத்தகைய புருஷர்களை மீளாத நரகத்தில் தள்ளிவிடும். ஆதலால், ஸ்திரீகளுக்குக் கற்பும், ஆடவர்களுக்கு ஒழுக்கமும் இக, பர சுகத்தைக் கொடுக்கும் தர்மங்களாகும்.

– மகரிஷி கெளதமர்

• ஒவ்வொரு குடும்பத்திலும், கணவர் உடல் என்றால், உயிர் மனைவியே ஆவாள். உயிர் இல்லாமல் உடல் இயங்க முடியாது. மேலும் குடும்பத்தின் ஆத்மசக்தியும் மனைவிதான். கணவரின் ஆரோக்கியமான வாழ்க்கையும், குழந்தைகள் நற்குணங்கள் கொண்டவர்களாக வளர்வதும், பித்ருக்களுக்கு உரிய காலங்களில் கைங்கரியங்கள் செய்வதற்குத் தன் கணவருக்கு ஆதரவாகவும் இருந்து, பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தருவதும் தர்மபத்தினிதான். மனைவி இல்லாத வீடு, மயானம் போன்றது.

– மகரிஷி ஆத்ரேயர் விஸ்வாசு என்ற மன்னருக்குச் செய்த உபதேசம்

• ஊசி காந்தத்தால் இழுக்கப்படுகிறது. பத்தினிப்பெண் தன் நாயகனுடனேயே தங்குகிறாள். கொடி செடியைச் சுற்றிக்கொள்கிறது. நதி கடலில் சங்கமமாகிறது. இது போலவே என் சிந்தனை பசுபதியாகிய சிவபெருமானின் பொற்பாதங்களை அடைந்து, என்றும் தங்குமானால், அதுவே பக்தியாகும்.

– ஆதிசங்கரர்

Previous Post
Next Post

Leave a comment