astrology dinamani
வீட்டில் ஊஞ்சல் கட்டலாமா? என்ன சொல்கிறது வாஸ்து?
2017/10/30

வீட்டில் ஊஞ்சல் கட்டலாமா? என்ன சொல்கிறது வாஸ்து?

வாஸ்து சாஸ்திரம் பற்றிய பொதுவான சில கேள்விகளும், அதற்கான பதில்களும்…..

• மனையடிக்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கும் என்ன தொடர்பு?
மனையடி என்பது எஜமானின் காலடியின் அளவைக் காட்டுகிறது. மனையடிக்கும், வாஸ்து சாஸ்திரத்திற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

• மனையடி சாஸ்திரம் என்பது மனையின் அளவை பொறுத்ததா? மனையில் உள்ள வீட்டின் அளவை பொறுத்ததா?
மனையடி சாஸ்திரம் என்பது (வாஸ்து சாஸ்திரம்) வீட்டின் அமைப்பை பொறுத்தே அமைகிறது.

• சித்திரை மாதம், வாஸ்து நாளில் பால் காய்ச்சிக் குடி போகலாமா?
பால் காய்ச்சி குடிபோவதற்கு சித்திரை மாதம் உகந்தது. சித்திரை மாதம் வளர்பிறையில், நல்ல நட்சத்திரம் வரும் நாளில் போவது மிகவும் சிறப்பாகும்.

• வடகிழக்கு மூலை நீண்டு இருக்கலாமா?
வடகிழக்கு மூலை நீண்டால், தென்கிழக்கு வெட்டுப்பட்டிருக்கும் அல்லது வடமேற்கு வெட்டுப்பட்டிருக்கும், இந்த இரண்டு அமைப்பும் தவறானதாகும்.

• வீட்டில் குளிர்சாதனப்பெட்டியை எங்கே வைக்க வேண்டும்?
வீட்டின் சமையலறையில் வடமேற்கு, தென்மேற்கு, தென்கிழக்கு ஆகிய இடங்களில் குளிர்சாதனப்பெட்டியை வைப்பது சரியானதாகும்.

• வீட்டில் ஊஞ்சல் கட்டலாமா?
ஊஞ்சல் என்பது கோயிலில் இறைவனை அமரவைத்துப் பூஜிக்க பயன்படுத்தும் ஓர் பொருளாகும். ஊஞ்சலை வீட்டில் அமைக்கும்போது கோயிலின் சூழ்நிலை வீட்டில் ஏற்பட வாய்ப்புண்டு. ஊஞ்சல் உள்ள வீடுகளைப் பார்க்கும்போது, அவர்கள் நிம்மதி இழந்த நிலையில் தான் இருப்பார்கள். எனவே ஊஞ்சலை வீடுகளில் வைப்பது தவறான செயல் ஆகும்.

Previous Post
Next Post

Leave a comment