astro_dinamani
விருச்சிக்க ராசிக்காரர்கள் அணிய வேண்டிய கல்
2014/08/04

விருச்சிக்க ராசிக்காரர்கள் அணிய வேண்டிய கல்

பவழம் கடல் வாழ் உயிரின வகையைச் சேர்ந்தவையாகும். பவழங்கள் பிளவு பட்டோ, கரும் புள்ளிகளுடனோ, நிறம் வெளிறிப்போயோ ஓரங்கள் ஒடிந்தோ, துளைகளுடனோ இருந்தால் அவை குறைவுடைய பவழமாக கருதப்படும். பவழத்தில் நாள்பட்ட, பூச்சி அரித்த பவழம் உபயோகத்திற்கு உகந்தது அல்ல.

இந்தகல் பகுத்தறிவையும், செயல் அறிவையும் துணிச்சலையும் கொடுக்கும், அதிக கோபம், பொறாமை, வெறுப்பு, கொலை, சிந்தனை ஆகிய திய குணங்களை அகற்றி சிறந்த ஞானத்தை கொடுக்கும். பயத்தையும் முட்டாள் தனத்தையும் போக்கும்.

சிவப்பு பவழம் பெண்களின் மாங்கல்யத்தை காப்பாற்றும். முறிந்துபோன கணவன் மனைவி உறவினை புதுப்பிக்கும், குழந்தைகளை கண்திருஷ்டியில் இருந்து காக்கும். பெண்களுக்கு விரைவில் திருமணமாக இந்த கல் உதவும்.

இக்கல்லை அணிவதால் கண்களில் பாதிப்புடையவர்கள், குடல் புண், இருதய பாதிப்பு, உஷ்ண சம்பந்தப்பட்ட நோய், தோல் நோய், பெண்களுக்கு உண்டாகக்கூடிய மாதவிடாய் கோளாறுகள் போன்வற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் பவழ கல்லை அணிவதால் அனைத்துவித பிரச்னைகளிலிருந்தும் விடுபடலாம்.

பூமிகாரகன் எனப்படும் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிகம் ஆகிய ராசிகளுக்கு அதிபதி, எனவே மேஷம் மற்றும் விருச்சிக ராசிகாரர்களும், மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சத்திரகாரர்களும், எண் கணிதபடி 9,18,27 தேதிகளில் பிறந்தவரும். பெயர் எண் 9 வருபவர்களும் பவழம் அணியலாம்.

பவழத்தை தங்கத்தில் பதிந்து மோதிர விரலில் அணிந்து கொள்வது நல்லது.

Previous Post
Next Post

Leave a comment