astrology dinamani
வியாபாரம் செய்யும் இடம் எப்படி இருக்க வேண்டும்?
2013/12/24

வியாபாரம் செய்யும் இடம் எப்படி இருக்க வேண்டும்?

தெற்கு, மேற்கு, தென் மேற்கு திசைகள் மேடான பகுதியாக அதாவது மலைகள் இருந்தால் நன்மை தரும். வடக்கு, கிழக்கு, வடகிழக்கு திசைகளில் இருந்தால் தீமையான பலன்கள் தரும்.

மலை அடிவாரத்தில் தொழிற்சாலைகளை அமைக்கக் கூமாது. வட கிழக்கோ மேடு, மலைகள் இருந்தால் அதனால் செல்வ இழப்பைத் தரும். கிழக்கே இருந்தால் எதிர்மறையான விளைவைத் தரும். வட மேற்கில் இருப்பதும் மாறுபட்ட பலனைத் தரும்.

தெற்கே மலை இருப்பது செல்வம் பெருகும். தென்மேற்கே மலை மேடு இருப்பது சிறந்தது. மேற்கே இருப்பது சிறப்புடையதாகும்.

ஆறு, நீர் நிலைகள்: வடக்கு, கிழக்கு, வட கிழக்கு திசையில் இருப்பது நற்பலன் தரும். இதில் வட கிழக்கில் இருப்பது செல்வம் பெருகும். தென் கிழக்கில் இருப்பது செல்வம் படிப்படியாக குறையும். தெற்கில் இருப்பது – எதிரிகளால் துன்பம் தரும். தென் மேற்கில் இருப்பது – அடிக்கடி தொழிலாளர்களால் பிரச்சினை உருவாகும். வட மேற்கில் இருப்பது – வீண் செலவுகளைத் தரும். வடக்கில் இருப்பது – செல்வம் பெருகும்.

கடல்: வடக்கில், கிழக்கில் இருந்தால் சிறந்தது.

கோயில்: கோயிலின் நிழல் வியாபார நிலையங்களில் விழக்கூடாது.
கொடிக்கம்பம், விளக்குத் தூண்: இவை வியாபார நிலையம், தொழிற்சாலையின் பிரதான வாசலுக்கு எதிரில் இருக்கக் கூடாது.

மேம்பாலம்: மேல்பாலம், பிளை ஓவர் இவற்றிற்கு கீழே இலுவலகம், வியாபார நிலையம், தொழிலகம் இருப்பது படிப்படியாக நசிந்துவிடும்.

மின்சார சாதனம்: தென் கிழக்கை ஒட்டி அமைக்க வேண்டும். இவ்விதம் இருந்தால் வியாபாரம் பெருகும். பண வரவு அதிகரிக்கும்.

விளம்பரப் பலகை: தெற்கு, மேற்கு, தென் மேற்கு திசையில் வைப்பது வியாபாரம் பெருகும்.
இடுகாடு, இறைச்சி வெட்டும் இடம், இவற்றுக்கு அருகில் தொழிற்சாலை, வியாபார நிலையம் அமைக்கக் கூடாது. சத்திரம். புதைகுழி இவற்றுக்கு எதிரிலும் இருப்பது இழைப்பைத் தரும்.

Previous Post
Next Post