astro_dinamani
விசாகம் 4-ம் பாதம் நட்சத்திரப் பலன்கள் (விருச்சிகம்)
2013/11/23

உயர்ந்த அறிவுத் திறன் கொண்டவர்கள். தீவிர தெய்வ பக்தி கொண்டவர்கள். வாழ்க்கையில் போலித்தனம் இருக்காது. உண்மையாக இருப்பார்கள். உண்மையாக நடப்பார்கள். பழைய சம்பிரதாயங்களில் அதிக ஈடுபாடோ நாட்டமோ இருக்காது. காலத்திற்கேற்ப நவநாகரீக மோகத்தில் திளைத்திருப்பார்கள்.

பிறருக்கு அளவுக்கதிகமாக மரியாதையைக் கொடுப்பார்கள். அடங்கிப் போவதும் அடிமையாக இருப்பதும் தற்கொலைக்கு சமம் என்று நினைப்பவர்கள். ஆன்மிகவாதிகளாக இருந்தாலும் அனைத்து மதங்களையும் சமமாக நினைப்பவர்கள்.
அன்பே சிவம், அகிம்சையே  கடவுள் என்கிற கோட்பாடுகள் மிக்கவர்கள். இவர்களது குணம் சில சமயம் விசித்திரமாக இருக்கும். அவசிய  செலவுகளுக்கு கணக்குப் பார்க்கும் இவர்கள், அனாவசிய செலவுகளுக்கு அதிக கவலைப்படமாட்டார்கள்.

விசாக நட்சத்திரத்தில் பிறந்த இவர்களுக்கு பெரும்பாலும் தாயன்பு  கிடைப்பதில்லை. குடும்ப உறவிலிருந்து விலகி  இருப்பார்கள். தங்களது சுய முயற்சியில் வாழ்க்கையை  அமைத்துக் கொள்வார்கள்.
நிர்வாக திறன் மிக்கவர்கள். குடும்ப வாழ்க்கையில் இருந்தாலும் பிற்காலத்தில்  அதிருந்து விலகி ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு  கொள்வார்கள்.

நட்சத்திர அதிதேவதை :- காளியம்மன்
பரிகார தெய்வம்    :- சிவன்
நட்சத்திர கணம்    :- ராட்ஷச கணம்
விருட்சம்    :- விளா மரம் (பாலில்லாத மரம்)
மிருகம்    :- பெண் புலி
பட்சி    :- பச்சைக்கிளி
கோத்திரம்  : – அகத்தியர்

Previous Post
Next Post