வார ராசி பலன் : ரிஷபம்

rishabamஜூன் 23-29

(கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய)

இந்த வாரம் சற்று செலவுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகளில் சிறிய காலதாமதமேற்படலாம். உஷ்ண ஆதிக்க உபாதைகளால் வயிற்று வலியும் உண்டாகலாம். வெளியூர் பயணங்களில் நன்மைகளை எதிர்பார்க்க வேண்டாம். பொருளாதார நிலை நன்றாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். மேலும் காலத்தைப் பாராமல் சற்று அதிகமாக  உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளைத் தேடி வாடிக்கையாளர்கள் வருவார்கள். கொடுக்கல்

வாங்கல் விஷயங்களில் கவனமாக இருக்கவும். விவசாயிகள் கடுமையாக உழைத்தால் அதற்கேற்ற பலனைப் பெறலாம். சிலருக்கு வழக்கு களால் மனஉளைச்சல் ஏற்படும்.

அரசியல்வாதிகள் கட்சியில் புதிய மாற்றங்களைக் கொண்டு வருவார்கள். பணவரவு நன்றாக இருக்கும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். பெண்மணிகள் குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு சுமுக நிலையை உண்டாக்கவும். மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் குறையும். ஆகவே படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.

பரிகாரம் :  சனிபகவானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள் : 23,25.

சந்திராஷ்டமம் :  இல்லை.

Previous Post
Next Post

Leave a comment