astro_dinamani
வாஸ்து விரதம் இருந்தால் சொந்த வீடு கட்டலாமா?
2017/09/08

வாஸ்து விரதம் இருந்தால் சொந்த வீடு கட்டலாமா?

எவ்வளவு தான் பணவசதி படைத்தவராக இருந்தாலும், சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் அமையாது. அப்படியே சொந்த இடம் இருந்தாலும், அதைக் கட்டி குடிபோகும் பாக்கியம் எல்லோருக்கும் கிட்டுவதில்லை.

சொந்த வீடு கட்டும் யோகம் அமைய என்ன செய்ய வேண்டும்? ஏதேனும் பரிகாரம் செய்யலாமா? ஏதாவது விரதம் மேற்கொள்ளலாமா? என்று கேட்பவருக்கு நிச்சயம் பரிகாரம் உள்ளது என்று தான் சொல்ல முடியும். வாஸ்து பகவானுக்கு விரதம் மேற்கொள்வதின் மூலம் சொந்த வீடு கட்டும் யோகத்தைப் பெறலாம்.

வாஸ்து விரதம் எப்படி அனுஷ்டிக்கலாம்….

வீட்டில் ஐந்து கற்களை ஈசானிய மூலையில் வைத்து ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் பூமி தேவியையும் வாஸ்து பகவானையும் செவ்வாய் கிரகத்தையும் நினைத்து விரதமிருந்து பூஜை செய்து வர வேண்டும்.

காலை செவ்வாய் கோலம் போட்டு அதன் மேல் நல்லெண்ணெய், நெய், தேங்காய் எண்ணெய் கலந்து ஊற்றி தீபம் ஏற்றி கற்கண்டு, தாம்பூலம் அவல் பொரி, கடலைப் படைத்து கற்பூர ஆரத்தி காட்டி 5 கற்களுக்கும் மலர் நவதானியம் போட்டு வழிபட்டு, இரவு பாலும் பழமும் சாப்பிட வேண்டும். இவ்வாறு 21 செவ்வாய்க் கிழமை விரதம் மேற்கொண்டு ஒரு வாஸ்து நாளில் பூஜையை நிறைவு செய்தல் வேண்டும்.

புவிமகள் புத்திரனே! நிலமதின் வேந்தனே செவிமருத்து அருள்தருவாய்…..என்று வேண்டக் கண்டிப்பாக சொந்த வீடு கட்டும் யோகப்பலன் கிட்டும்.

Previous Post
Next Post