astro_dinamani
வாஸ்து எப்போது சாஸ்திரமானது?
2017/08/26

வாஸ்து எப்போது சாஸ்திரமானது?

வாஸ்து என்பது ‘வஸ்து’ என்கிற வார்த்தையின் தொடர்ச்சி ஆகும். வஸ்து என்றால் ஒரு மறைபொருளாக உள்ளது என்று அர்த்தம். நாம் வசிக்கும் வீட்டில் ‘வஸ்து”, ஒரு மறைபொருளாக இருந்து நமக்கு நன்மைகளைப் பயக்கும் என்று கூறுகிறார்கள் நம் முன்னோர்கள்.

நாம் வசிக்கும் வீட்டை, இயற்கை விதிகளுக்கு உட்பட்டுக் கட்டி வாழ்ந்துள்ளார்கள் நம் முன்னோர்கள். எல்லோரும் சுக வாழ்வு வாழ வேண்டுமென்று வாஸ்து விதிமுறைளை முறைப்படுத்தி, அந்த விதிமுறைகளை நமக்கு சாஸ்திரமாக கொடுத்துள்ளார்கள். அனைத்து வேதங்களும், சாஸ்திரங்களும் மனிதன் எப்படி வாழ வேண்டுமென்று வலியுறுத்துகிறதோ அதேபோல், மனிதன் கட்டிடங்களை கட்டி வாழ வாஸ்து சாஸ்திரம் வலியுறுத்துகிறது.

நாம் வசிக்கும் வீட்டின் அமைப்புகளை வைத்தே அந்த வீட்டில் குடியிருப்பவர்களுக்கு இந்த மாதிரியான நன்மைகளும், தீமைகளும் நடைபெறும் என்று நமது முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

வாஸ்து சாஸ்திரம் என்பது பலகாலமாகவே நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அதில் குறிப்பாக அரண்மனைகளும், மிராசுதார் வீடுகளும், நாட்டாமை வீடுகளும், கோயில்களும் வாஸ்து சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டே கட்டப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிகள்
நம்முடைய இடமும் சரி, கட்டிடங்களும் சரி சதுரம், செவ்வகமாக மட்டுமே இருக்க வேண்டும். இதைதவிர்த்து ‘டு” டைப்பில் இருக்கக்கூடாது, வட்ட வடிவத்தில் இருக்கக்கூடாது, முக்கோணம் போன்ற அமைப்புகளையும் தவிர்ப்பது நல்லது. அதே நாம் வாங்கக்கூடிய இடம் நீளத்தில் ஒரு மடங்கு என்றால் அகலத்தில் இருமடங்காக மட்டுமே இருக்க வேண்டும். அதே அகலத்தில் ஒரு மடங்கு என்றால் நீளத்தில் இரு மடங்காக இருக்க வேண்டும். இதுவே நல்ல அமைப்பு, இதைதவிர்த்து நீளத்தைக் காட்டிலும் 5 மடங்கு அல்லது 10 மடங்கு அகலத்தில் உள்ள மனைகள் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

தென்மேற்கு உயரமாகவும், வடகிழக்கு பள்ளமாகவும் இருக்கும் அமைப்புகள் மட்டுமே சிறந்தது. இதைத் தவிர்த்து தென்மேற்கு பள்ளமான அமைப்புகளும் அதாவது நீரோடைகள், ஆறுகள், குளங்கள், குட்டைகள் போன்றவை தவறானவை. நல்ல அமைப்புகளான தென்மேற்கு பகுதியில் உயரமான மரங்கள், குன்றுகள், மலைகள், உயரமான கட்டிட அமைப்புகள் இருப்பது நல்ல பலனாகும்.

Previous Post
Next Post

Leave a comment