வாஸ்துப்படி வீட்டிற்கு வர்ணம் பூசலாமே

வாஸ்துப்படி வீட்டிற்கு வர்ணம் பூசலாமே

நமக்கென்று ஒரு இடம் வாங்கி, அதில் ஒரு அழகான வீடு கட்டிப் பார்க்கும் போது கிடைக்கும் சந்தோஷம் எதிலும் இருக்கமுடியாது. வாஸ்து சாஸ்திரப்படி பார்த்து பார்த்து ஒவ்வொரு அறையையும் கட்டி முடிக்கின்றோம். சரி அதற்கு ஏற்ற வண்ணங்கள் அடித்தால் தானே மனத்திற்கு நிறைவு ஏற்படும்.

நாம் ஒவ்வொரு விஷயத்திலும் மனநிறைவோடு வாழ நவக்கிரகங்களின்  அனுக்கிரகம் நமக்கு நிச்சயம் தேவைப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வோரு வண்ணம் பிடித்தமானதாக இருக்கும்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசிக்கதிபதியைப் பொறுத்து அவரது வீட்டிற்கு வர்ணம் பூசினால் நலம் தரும். வளமான வாழ்வமையும்.

உதாரணம்: வீட்டின் உரிமையாளர் தனுசு ராசியானால் – அதன் அதிபதி குரு. அந்தவீட்டில் மஞ்சள், இளம் மஞ்சள், தங்க நிறம் போன்ற வண்ணங்களை பூசலாம்.

அவரது மனைவி சிம்ம ராசியானால் – அதன் அதிபதி சூரியன். இவர்கள்  இளம் சிவப்பு அல்லது ரோஜா நிறம் கலந்து பூசலாம்.

இதனால் அந்த வீட்டிற்கு இளம் சிவப்பு, ரோஜா நிறம், மஞ்சள் நிறம், பொன் நிறம், இளம் மஞ்சள் இவ்விதமான நிறங்களில் உள்ளும், புறமும் பூசலாம். வெளிப்பக்க சுவருக்கு சற்று கூடுதலான வண்ணமுடைய நிறங்களையே பூசலாம். உள்பக்கம் மனதிற்கிசைந்த இளம் வர்ணத்தை பூசலாம்.

நவக்கிரங்களுக்கு ஏற்ற வர்ணங்கள்
சூரியன் – கிழக்கு – இளம் சிவப்பு, ரோஜா நிறம்
சந்திரன் – தென் மேற்கு – வெண்மை, சங்கு வெள்ளை, சுண்ணாம்பு
செவ்வாய் – தெற்கு – இரத்த சிவப்பு, கரும் சிவப்பு, பச்சை
புதன் – வடக்கு – பச்சை
குரு – வட கிழக்கு – மஞ்சள், தங்க நிறம், இளம் மஞ்சள்
சுக்கிரன் – தென் கிழக்கு – பழுப்பு வர்ணம்
சனி – மேற்கு – கறுப்பு
ராகு – அல்ட்ரா வையலட்
கேது – சிவப்பு (கருஞ்சிவப்பு)

Previous Post
Next Post

Leave a comment