astro_dinamani
வாஸ்துப்படி வடமேற்கு பகுதியில் என்னவெல்லாம் இருக்கலாம்?
2017/11/14

வாஸ்துப்படி வடமேற்கு பகுதியில் என்னவெல்லாம் இருக்கலாம்?

வாஸ்து சாஸ்திரப்படி வடமேற்கு பகுதியின் எந்த அமைப்புகள் இருந்தால் நன்மை ஏற்படும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

• வடமேற்கு முழுவதும் காம்பவுண்ட் அமைப்பு இருக்கலாம், வடமேற்கில் வீட்டின் வெளிப்பகுதியில் கழிவுநீர் தொட்டியுள்ள அமைப்பு இருக்க வேண்டும்.

• வீட்டிற்குள் வடமேற்கு பகுதியில் குளியலறை, கழிவறை அமைப்பு இருக்க வேண்டும். வீட்டின் வெளிப்பகுதியில் கிழக்கு, மேற்கு பார்த்தாற்போல் குளியலறை, கழிவறை அமைப்புகள் இருக்கலாம்.

• வடமேற்கு அறை குழந்தைகள் படிக்கும் அறையாக இருப்பது நல்லது. விருந்தினர் அறையாகவும் பயன்படுத்தலாம்.

• வடமேற்கில் வெளிப்புறத்தில் கேட்டில் உள் மூலையில் படி அமைப்பு இருக்கலாம். கார் செட் போடலாம்.

• வீட்டுடன் சேர்க்காமல் குடோன் போன்ற அமைப்புகள் வைத்திருக்கலாம். வடமேற்கில் பகுதி வெட்டுப்படாமல் சதுரமாக இருப்பது நன்மை.

இப்படி இருந்தால் என்ன பயன்?

இந்த அமைப்பு இருந்தால் சிறந்த கலைநயமிக்க வேலையில் இருப்பார்கள். மிகச்சிறந்த பேச்சாளராக இருப்பார்கள். நாணயம் உள்ளவர்களாக இருப்பார்கள். பிரபலமானவர்களாக இருப்பார்கள். இறைபக்தியுடன் கூடிய செயல்கள் செய்பவர்கள்‘. விளையாட்டு துறையில் நிறையப் பரிசு பெறுபவர்களாக இருப்பார்கள். மிகப்பெரிய செல்வந்தர்களாக இருப்பார்கள். சிறந்த அரசியல்வாதிகளாக இருப்பார்கள்.

 

Previous Post

Leave a comment