ஏப்ரல் 20 – ஏப்ரல் 26
(அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)
புதிய கடன்கள் வாங்க நேரிடலாம். நெருங்கியவர்களுடன் விரோதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த செயலிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வதால் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். வாகனத்தில் செல்லும்போது கவனம் அவசியம். உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது.
உத்தியோகஸ்தர்களிடம் மேலதிகாரிகள் நட்புடன் நடந்து கொள்வார்கள். நண்பர்களும் உதவுவார்கள். எடுத்த காரியங்களை குறித்த காலத்திற்குள் முடிப்பீர்கள். வியாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் லாபகரமாக முடியும். புதிய முதலீடுகளில் வெற்றி கிடைக்கும். விவசாயிகளுக்கு மகசூல் அதிகரிக்கும். ஆனால் கோதுமையை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு குறைவான பலன்களே கிடைக்கும்.
அரசியல்வாதிகள் முயற்சிக்கேற்ற பதவி உயர்வுகளைப் பெறுவீர்கள். உடல் சோர்வைப் பொருட்படுத்தாமல் கட்சிப் பணியாற்றுவீர்கள். கலைத்துறையினரின் திறமைகள் அரங்கேறும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்மணிகளுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவமணிகள் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும்.
பரிகாரம்: பைரவரை வழிபட்டு வரவும்.
அனுகூலமான தினங்கள்: 20, 21.
சந்திராஷ்டமம்: இல்லை.