பிப்ரவரி 15 – பிப்ரவரி 21
(விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)
திட்டமிட்ட வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். எண்ணங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சுபச்செய்தி ஒன்று தேடி வரும். இருப்பினும் பேச்சில் கவனம் தேவை. உறவினர்களின் அலட்சியப்போக்கு மன வேதனையை கொடுக்கும்.
உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கெடுபிடிகளுக்கு ஏற்றவாறு உழைக்க நேரிடும். எதிர்பார்த்த பதவி உயர்வு தடைபடும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சீராக இருக்கும். ஆனாலும் புதிய முயற்சிகளைத் தள்ளிப் போடவும். கூட்டாளிகளின் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும். விவசாயிகளுக்கு கால்நடைகள் மூலம் எதிர்பார்த்த வருமானம் வராமல் போகும்.
அரசியல்வாதிகளுக்கு எடுத்த காரியங்கள் அனைத்தும் சுமுகமாக முடியும். மேலிடத்தின் பார்வை உங்கள் மீது விழும். தொண்டர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். பெண்மணிகளுக்கு இல்லத்தில் நிலவும் அமைதியால் உற்சாகம் அடையலாம். மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் ஈடுபடவும்.
பரிகாரம்: நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 17, 20.
சந்திராஷ்டமம்: 15,16.
very useful to all pl continue thanks
Useful and realistic in guiding the customer. Keep it up and continue the service