astro_dinamani
வார ராசி பலன் : மகரம்
2016/06/10

makaram

நவம்பர் 17 – நவம்பர் 23 

(உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

தடைகள் விலகும். யோக பாக்கியங்கள் அதிகரிக்கும். வருமானம் இரட்டிப்பாகும். பழைய கடன்களை அடைப்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீகச் சொத்துகளில் இருந்த பிரச்னைகள் அகலும். இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சீராகப் பணியாற்றத் தொடங்குவார்கள். பயணங்களால் பணவரவு உண்டாகும். வியாபாரிகளுக்கு முயற்சியின் அளவுக்கு ஏற்ப லாபம் அதிகரிக்கும். புதிய கடன்களை வாங்கி வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பீர்கள். விவசாயிகள் சந்தையில் போட்டிக்கு ஏற்றவாறு பொருள்களை விற்பனை செய்வீர்கள். திருப்திகரமாக லாபத்தை அள்ளுவீர்கள்.

அரசியல்வாதிகளின் அந்தஸ்தில் சற்று குறைபாடுகள் உண்டாகும். கட்சி மேலிடத்தில் கவனமாக இருக்கவும். கலைத்துறையினரின் முயற்சிகள் வெற்றி பெறும். உங்களின் செயல்கள் மக்களைக் கவரும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சாதகமான நிலை தென்படும். மாணவமணிகளுக்கு உடற்பயிற்சியில் நாட்டம் அதிகரிக்கும். கேளிக்கைகளிலும் விளையாட்டிலும் ஈடுபட்டு மகிழ்வீர்கள்.

பரிகாரம்: பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள்: 20,22.

சந்திராஷ்டமம்: இல்லை.

Previous Post
Next Post

2 Comments to “வார ராசி பலன் : மகரம்”

  1. My life

  2. Good message but if we need more details were we can contact u let us know

Leave a comment