astrology dinamani
வார ராசி பலன் : துலாம்
2016/06/10

thulam

ஏப்ரல் 20 – ஏப்ரல் 26

(சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

உங்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். திட்டமிட்ட செயல்களில் வெற்றிகளைக் காண்பீர்கள். பயணங்களால் பலன்கள் உண்டாகும். மற்றபடி சேமிப்பு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகள் சுமுகமாக முடியும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும்.  சக ஊழியர்களிடம் உங்கள் வேலைகளைக் கொடுக்காமல் நீங்களாகவே செய்வது நல்லது. வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல்கள் திருப்திகரமாக முடியும்.  விவசாயிகளுக்கு மகசூல் பெருகி லாபம் அதிகரிக்கும். விவசாய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளின் செயல்கள் சாதனைகளாக மாறும். எதிரிகளிடம் கவனத்துடன் பழகவும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர்களின் நலனில் அக்கறை காட்டவும். பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

மாணவமணிகள் விரும்பிய பாடப்பிரிவுகளைப் பெற்று மகிழ்வீர்கள். உடல் நலம் மனவளத்தை மேம்படுத்த யோகா, பிராணாயாமம் செய்வது நல்லது.

பரிகாரம்: திங்களன்று விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 22, 25.

சந்திராஷ்டமம்: இல்லை.

Previous Post
Next Post

4 Comments to “வார ராசி பலன் : துலாம்”

  1. PL SEND YOUR DAILY RAASI PALAN

  2. Subramonia Pillai // 2014/05/04 at 8:41 PM //

    Pls. send my Weekly Rasi palan THULAM to my email. thanks

  3. Subramonia Pillai // 2014/05/04 at 8:41 PM //

    Your rasi palan is perfectly analysed

  4. please send my thulam rasi palan every week -Regards

Leave a comment