பிப்ரவரி 15 – பிப்ரவரி 21
(மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)
கவலைகளை மறந்து செயலாற்றுங்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களிடம் விட்டுக்கொடுத்து நடந்து கொள்ளவும். பெரியோர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு திடீர் பதவி உயர்வுகள் கிடைக்கும். அனைவரும் உதவ முன் வருவார்கள். வியாபாரிகளுக்கு போட்டிகளால் பாதிப்புகள் ஏற்படாது. வியாபாரத்தில் புதிய யுக்திகளைப் புகுத்துவீர்கள். விவசாயிகள் கொள்முதலில் லாபத்தை அள்ளுவார்கள். கால்நடைகளை வாங்கி உபரி வருமானத்தைப் பெருக்கவும்.
அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் பாராட்டு கிடைக்கும். புதிய பதவிகளும் கிடைக்கும். எதிரிகள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். கலைத்துறையினரின் ஆற்றல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும்.
பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியைக் காண்பார்கள். தாய்வழி உறவினர்கள் அனுகூலமாக இருப்பார்கள். மாணவமணிகள் நண்பர்களின் உதவிகளைப் பெறுவார்கள்.
பரிகாரம்: தினமும் ராமபக்த அனுமனை வழிபடவும்.
அனுகூலமான தினங்கள்: 16, 21.
சந்திராஷ்டமம்: 17, 18.
super
Thanks!