வார ராசி பலன் : சிம்மம்

simham

ஜூன் 23-29

(மகம், பூரம்,உத்திரம் முதல் பாதம் முடிய)

உங்களின் செயல்களில் நிலவி வந்த தடைகள் தாண்டி வெற்றி பெறுவீர்கள். மனதிலும் உடலிலும் புதிய பொலிவு தென்படும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். நண்பர்கள் உங்களை அனுசரித்து நடந்து கொள்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் குறையும்.

உத்தியோகஸ்தர்களுக்கு வேலைத்திறன் அதிகரிக்கும். வருமானமும் பெருகும். பணிகளை நன்றாக செய்து முடிப்பீர்கள்.  வியாபாரிகளுக்கு அலைச்சலும் டென்ஷனும் குறையும். தொழிலில் மாற்றங்கள்செய்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகமாகும். புதியகுத்தகைகளால் லாபம் கொட்டும்.

அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகள் சாதகமாக அமையும். கட்சியில் யாரிடமும் எதிர்ப்பு காட்ட வேண்டாம். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் செய்து கொடுப்பதில் சில சிரமங்கள் உண்டாகும். செயலாற்றும் நேரங்களில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.

பெண்மணிகள் குடும்பத்தில் அமைதியை காண்பார்கள். குடும்பப் பொறுப்பை ஏற்று நடத்துவார்கள். மாணவமணிகள் படிப்பில் அக்கறையுடன் செயல்படவும். ஞாபக சக்தி வளர விடியற்காலையில் கல்விக்கான பயிற்சிகளை மேற்கொள்ளவும்.

பரிகாரம் : ஆஞ்சநேயரை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள் : 25,26.

சந்திராஷ்டமம் :  இல்லை.

Previous Post
Next Post

Leave a comment