வார ராசி பலன் : கும்பம்

kumbam

ஜூன் 23-29

(அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

வரவுக்கேற்ப எச்சரிக்கையாக செலவு செய்வீர்கள். சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடந்தகால பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். பழைய கடன்களைத் தீர்க்க முயல்வீர்கள்.

குடும்பத்தினரின் மீது பாசம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பெயரும் புகழும் பெறுவீர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். இருப்பினும் விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு குறைவு. வியாபாரிகள் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பார்கள். உழைப்புக்குத் தகுந்த பலன்களைப் பெறுவார்கள். விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். மகசூல் அதிகரிக்க நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்கிக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள் தொண்டர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். சமூக சேவையில் புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் சுமாராகவே கிடைக்கும். ரசிகர்களின்ஆதரவு குறையும்.

பெண்மணிகள் குடும்பத்தில் மதிப்பு உயரக் காண்பார்கள்.கணவரின் உடல்நலத்தில் கவனம் செலுத்துவார்கள்.மாணவமணிகள் கல்வியில் கவனம் செலுத்தி நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.

பரிகாரம்: ஸ்ரீராமபிரானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள் : 24,28.

சந்திராஷ்டமம் : இல்லை.

Previous Post
Next Post

2 Comments to “வார ராசி பலன் : கும்பம்”

  1. nice

Leave a comment