வார ராசி பலன் : கன்னி

kanni

ஜூன் 23-29

(உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நிலையில் சிறு குறைபாடுகள் ஏற்பட்டாலும் உங்களின் செயல்கள் சரியான நேரத்தில் முடிவடையும். உங்களின் தைரியம் குறையும். கற்பனையான பயத்தில் இருப்பீர்கள். செய்தொழிலில் சீரான முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்திலும் சுக சௌகரியங்களுக்கு குறைவு வராது. ஆன்மிக பலம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு இந்த வாரம் பிரச்னைகள் குறையும். மேலதிகாரிகள் மனக்கசப்பு நீங்கி நட்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரிகள் வருமானத்திற்குப் பல வழிகளைக் காண்பீர்கள். புதியவர்களை நம்பி  கடன் தராதீர்கள். விவசாயிகளுக்கு வரவேண்டிய குத்தகை பாக்கிகள் கிடைக்கும். விளைச்சலில் எந்த பாதிப்பும் இல்லை.

அரசியல்வாதிகளின் மக்கள் தொண்டுகளுக்கு நல்ல அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தான பதவிகளைப் பெறுவீர்கள். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். ரசிகர்

மன்றங்களுக்குச் செலவு செய்து மகிழ்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மாணவமணிகள் படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம் : முருகப்பெருமானை வழிபட்டு வரவும்.

அனுகூலமான தினங்கள் : 23,26.

சந்திராஷ்டமம் :  இல்லை.

Previous Post
Next Post

2 Comments to “வார ராசி பலன் : கன்னி”

Leave a comment