வார ராசி பலன் : கடகம்

katakam

ஜூன் 23-29

(புனர்பூசம்4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

குடும்பத்தில் அமைதி நிலவும். புதிய நட்பு உருவாகும். உங்கள் நம்பிக்கைகள் பலப்படும். வம்பு வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வருமானம் நன்றாக இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் இடையூறுகளைச் சமாளித்து வேலைகளை முடிப்பீர்கள். பணவரவுக்குத் தடைகள் வராது. வியாபாரிகளுக்கு இவ்வாரம் கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் இழுப்பறியாகவே அமையும்.

கடன் கொடுத்து வியாபாரத்தைப் பெருக்க வேண்டாம். விவசாயிகள் அதிக போட்டிகளைச் சமாளிக்க வேண்டி வரும்.  உழைப்பைப் பெருக்கிக் கொள்ளவும்.

அரசியல்வாதிகள்புதிய யுக்தியுடன் கட்சிப் பணிகளைச் செய்வீர்கள். கட்சி மேலிடம் உங்கள் மீது கவனம் செலுத்தும். கலைத்துறையினருக்கு முழுமையான வாய்ப்புகள் கிடைப்பது அரிது. பெண்மணிகள் இல்லத்தில் நிலவும் சந்தோஷத்தால் உற்சாகமடைவீர்கள் . மாணவமணிகளுக்கு படிப்பில் சோதனைகள் ஏற்பட்டாலும் மதிப்பெண்கள் குறையாது. பெற்றோரின் ஆதரவு உண்டு

பரிகாரம் : நந்தீஸ்வரருக்கு அருகம்புல் மாலை அணிவித்து நலம் பெறுங்கள்.

அனுகூலமான தினங்கள் : 24,26.

சந்திராஷ்டமம் :  இல்லை.

Previous Post
Next Post

Leave a comment