astro_dinamani
வாயு மூலையில் என்ன இருக்கலாம்? என்ன இருக்கக்கூடாது?
2017/09/15

வாயு மூலையில் என்ன இருக்கலாம்? என்ன இருக்கக்கூடாது?

ஒரு மனிதனின் நேர்மையை தீர்மானிப்பதும், மனநிலையை தீர்மானிப்பதும் நமது வீட்டின் வடமேற்கு பகுதி தான். அதாவது, இந்த பகுதியை வாயு மூலை என்றும் அழைப்பார்கள். அறிவார்ந்த பல விஷயங்களை கற்றுக்கொள்ளவும், கலைநயம் மிக்க வேலைகளை கற்றுக் கொள்ளவும், வெளி உலக தொடர்பை மிக பெரியதாக அமைத்துக்கொள்ள உதவுவதும் இந்த வடமேற்கு பகுதிதான்.

பொருளாதாரத்தில் மிக உயர்ந்த நிலைக்கு செல்வதும், பொருளாதாரத்தில் படு மோசமான நிலைக்கு தள்ளப்படும் திசை இந்த வடமேற்கு தான். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த வடமேற்கு பகுதியை எவ்வாறு அமைத்து கொண்டால் நமக்கு நன்மை விளைவிக்கும். தவறாக அமைத்தால் தீமை விளைவிக்கும் என்பதை பற்றிப் பார்ப்போம்.

வாயு மூலையில் என்னவெல்லாம் அமைக்கலாம்….

கழிவறை, பூஜை அறை, சமையல் அறை, உறவினர்கள் தங்கும் அறை, குழந்தைகள் தங்கும் அறைகள், ஹால் போன்றவை அமைக்கலாம்.

வாயு மூலையில் என்னவெல்லாம் அமைக்கக்கூடாது….

மாஸ்டர் பெட்ரூம், உள்மூலை படிக்கட்டு, தண்ணீர் தொட்டி அமைப்பு, கார் பார்க்கிங்

ஆகியவை வடமேற்கு பகுதியில் அமைத்தல் கூடாது. பல லட்சங்களை கொட்டி கட்டப்படும் வீடானது சரியான அமைப்புகள் பெற்றிருப்பது மிகவும் அவசியம். வாஸ்துவில் நல்ல அனுபவம் வாய்ந்த நிபுணரை அணுகி வாஸ்து முறைப்படி வீடு கட்டினால் அந்த வீட்டில் என்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.

Previous Post
Next Post

Leave a comment