astrology dinamani
ராகு கேது பெயர்ச்சிப் பலன்கள்
2013/11/19

mithunamமிதுனம் (மிருகசீரிஷம்3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

2013ஆம் ஆண்டு முழுவதும் ராகு, கேது பகவான்கள் உங்களின் பூர்வ புண்யம், லாபஸ்தான ராசியில் சஞ்சரிக்கிறார்கள். சனி பகவான் உங்களின் பூர்வ புண்ய ராசியில் சஞ்சரிக்கிறார். குரு பகவான் இந்த ஆண்டு மே மாதம் வரையில் அயனஸ்தானத்திலும் அதற்குப் பிறகு ஆண்டு இறுதி வரை ஜன்ம ராசியிலும் சஞ்சரிக்கிறார்.

ராகு, கேது, சனி மூவரின் சஞ்சாரத்தினால் இந்த ஆண்டு அனைத்து விஷயங்களையும் உங்களின் சுய முயற்சியினால் செய்து முடிப்பீர்கள். பெரிய மனிதர்களுடன் இணைந்து செயலாற்றும் வாய்ப்பு கிடைக்கும். சிலர் வேறு ஊருக்கு சென்று வசிக்க நேரிடலாம். எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழுமையான பலன்களைப் பெறுவீர்கள். குழந்தை இல்லாதோர்க்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவீர்கள்.

உங்களின் நெடுநாளைய எண்ணம் இந்த ஆண்டு நிறைவேறும். புண்ணிய காரியங்களில் ஈடுபட்டு உங்களின் அருட்சக்தியைக் கூட்டிக் கொள்வீர்கள். உயர்ந்தோரிடம் பணிவுடன் நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். முக்கிய தருணங்களில் நண்பர்களின் உதவியைப் பெறுவீர்கள். குறுகிய தூரப் பயணங்களைச் செய்வீர்கள். அதேநேரம் மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் சமயத்தில் தவறான கருத்தை மனமறிந்து கூற வேண்டாம். உங்களின் ஆலோசனைகள் பலரை மாற்றும் காலகட்டம் இது.

இந்த ஆண்டு மே மாதம் வரையில் உள்ள காலகட்டத்தில் குரு பகவானின் அருளால் உங்களின் அறிவாற்றல் அதிகரிக்கும். உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் உதவி செய்து மகிழ்வீர்கள். குரு ஸ்தானத்தில் உள்ளவர்களின் ஆசிகள் கிடைக்கும். நேர்முக சிந்தனைகள் வளரும். அதேநேரம் உங்களைப் பற்றி தற்பெருமை பேசுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளும் ஏற்படும். குழந்தைகள் சிறிது அடங்காமல் உங்களின் சொல் பேச்சு கேட்காமல் நடந்துகொள்வார்கள்.

இந்த ஆண்டு ஜுன் மாதத்திற்குப் பிறகு ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் குரு பகவானின் அருளால் வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். “மனம் போல் மாங்கல்யம்’ என்று கூறுவார்களே…. அதற்கேற்றார்போல் சுபகாரியங்கள் எதிர்பாராமலேயே நடந்தேறும். சமுதாயத்தில் உயர்ந்த பதவிகள் கிடைக்கும். கூட்டாளிகளுக்கிடையே இருக்கும் பிரச்னைகளில் தலையிடாமல் நடுநிலைமையுடன் செயல்படுவீர்கள். எதிர்வரும் சோதனைகள் தானாகவே விலகும்.

அதேநேரம் அவ்வப்போது உங்களின் தன்னம்பிக்கை குறையும். எதிர்காலத்தைப் பற்றிய கவலை, கற்பனை பயம் உண்டாகும். மற்றபடி தெய்வமும், பிரார்த்தனையும், வழிபாடும்தான் உங்களை வழி நடத்திச் செல்கிறது என்பதை ஆத்மார்த்தமாக உணர்வீர்கள். செய்தொழிலை சிறப்பான முறையில் காத்துக்கொள்வீர்கள். ஆனாலும் சகோதர, சகோதரிகளின் எதிர்ப்பு மற்றும் ஒத்துழையாமையை சந்திக்க நேரிடும்.

உத்யோகஸ்தர்கள் இந்த ஆண்டு அலுவலக வேலைகளில் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திட்டமிட்ட வேலைகளைக் குறித்த காலத்திற்குள் முடித்து விடுவீர்கள். சக ஊழியர்களும் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். அதேநேரம் அலுவலக ரீதியான பயணங்களைத் தவிர்க்க முடியாது. வியாபாரிகளுக்கு நல்லவர்கள் கூட்டாளிகளாக அமைவார்கள். வியாபாரத்தில் நஷ்டங்கள் வராது. வாராக் கடன் என்று நினைத்திருந்தவை திரும்பி வந்து உங்களை ஆச்சரியப்படுத்தும். அதேநேரம் கணக்கு வழக்குகளை சரியாக வைத்துக் கொள்ளவும். உங்களின் தனித் தன்மை வெளிப்படும் ஆண்டாக இது அமைகிறது.

விவசாயிகள் நல்ல வருமானத்தைக் காண்பீர்கள். புதிய நிலம் குத்தகைக்கு கிடைக்கும். மேலும் வருமானத்தைப் பெருக்க கால்நடைகளை வாங்குவீர்கள். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவர்களைத் தக்க வைத்துக் கொள்ளவும். விவசாயத்தைப் பெருக்க புதிய உபகரணங்களை வாங்குவீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு கட்சி மேலிடத்தின் ஆதரவு நன்றாக இருந்தாலும் புதிய பொறுப்புகளைப் பெற முடியாது. அதேசமயம் உங்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் உங்களுக்கு சாதகமாகவே முடிவடையும். கட்சி மேலிடத்திற்குத் தகவல் அனுப்பும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலைகளை திட்டமிட்டு செய்து வெற்றி பெறுவீர்கள். தொண்டர்களின் ஆதரவு நன்றாகவே இருக்கும்.

கலைத்துறையினருக்கு புகழோடு பண வரவும் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்களைப் பெற நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் பலனளிக்கும். ரசிகர்களின் ஆதரவுடன் பயணங்களை மேற்கொள்வீர்கள். உங்களின் பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள்.

பெண்மணிகள் தங்களின் எண்ணங்களை சிறப்புடன் செயல்படுத்துவீர்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவமணிகள் படிப்பில் மேலும் ஆர்வம் செலுத்தினால்தான் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற முடியும். மற்றபடி பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவு தொடர்ந்து நன்றாகவே இருக்கும். உள்ளரங்கு விளையாட்டுகளில் மட்டுமே ஈடுபடவும்.

பரிகாரம்: ஸ்ரீராமபக்த அனுமனை வழிபடவும்.

Previous Post
Next Post