astrology dinamani
ஜூலை மாத எண்கணித பலன்கள் – 9
2019/05/09

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

தம்மை போலவே மற்றவர்களும் காலத்தை வீணாக்காமல் நடந்து கொள்ள வேண்டும் என்று எண்ணும் ஒன்பதாம் எண் அன்பர்களே இந்த மாதம்  பல வழியிலும் பணவரத்து இருக்கும். காரியத் தடைகள் நீங்கும்.

மற்றவர்களின் மீது இரக்கம் ஏற்பட்டு உதவிகள் செய்வீர்கள். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். பெரியோர்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். பெரும் புள்ளிகளின் அறிமுகம் கிடைக்கும். தொழில், வியாபாரம் மூலம் லாபம் அதிகம் வரும்.

புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கலைத்துறையினருக்கு எல்லா பிரச்சனைகளும் சுமூகமாக முடியும். பணவரத்து தாமதப்படும். அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த முன்னேற்றம் தாமதப்படும்.

மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும்.  திறமையுடன்  காரியங்களை செய்வீர்கள்.

பரிகாரம்: குருவுக்கு வியாழக்கிழமை அன்று கொண்ட கடலை நிவேதனம் செய்து வணங்குவதும் வருமானத்தை உயர்த்தும். மன அமைதி கிடைக்கும்.

Previous Post
Next Post