astrology dinamani
ஜூலை மாத எண்கணித பலன்கள் – 8
2019/05/09

8, 17, 26  ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

ஆதரவற்றவர்களை ஆதரிக்கும் குணமுடைய எட்டாம் எண் அன்பர்களே இந்த மாதம்  பொன், பொருள் சேரும். வாகன யோகம் உண்டாகும். விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய தொடர்புகள் ஏற்படும். மனம் மகிழும்படியான சம்பவங்கள் நடக்கும். பயணங்கள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  வேலை சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தினருக்காக பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசியல் துறையினருக்கு உயர் பதவிகள் கிடைக்க கூடும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது  அதிகரிக்கும்.

பரிகாரம்: தினமும் சிவனை வணங்கி சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது துன்பங்களை போக்கும். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

Previous Post
Next Post