astrology dinamani
மே மாத எண்கணித பலன்கள் – 5
2019/05/09

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

சாமர்த்தியமும் புத்திசாலித்தனமும் கொண்ட ஐந்தாம் எண் அன்பர்களே, இந்த மாதம் பணவரத்து இருக்கும். மனகவலை நீங்கும். எடுத்த காரியத்தை திருப்தியுடன் செய்து முடிப்பீர்கள். சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கைகொடுக்கும். எதிலும் கவனம் தேவை. புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும்.

வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து மனநிம்மதி அடைவார்கள். குடும்ப உறுப்பினர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும்.  கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும்.

பெண்களுக்கு காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கி திருப்தியாக நடந்து முடியும். கலைத்துறையினருக்கு சாதூரியமான பேச்சின் மூலம் பிரச்சனைகள் தீரும். அரசியல்துறையினருக்கு பணவரத்து திருப்தி தரும்.  மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் இருந்த போட்டிகள் குறையும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

பரிகாரம்: தினமும் பெருமாளை வழிபடுவதால் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறும்.

Next Post