astrology dinamani
மே மாத எண்கணித பலன்கள் – 4
2019/05/09

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எதிலும் வேகமாக செயல்படும் நான்காம் எண் அன்பர்களே, இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. ஏதேனும் மனகஷ்டம் உண்டாகும். வீண்செலவு ஏற்படும். உடல்சோர்வு வரலாம்.  மனோதைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமடைய பாடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைய வேண்டி இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான சூழ்நிலை வரலாம்.

வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். பெண்களுக்கு மனோதைரியம் அதிகரிக்கும்.

கலைத்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு திட்டமிட்டபடி செயல்பட முடியாதபடி தடங்கல்கள் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் அக்கறை தேவை. மன வலிமை அதிகமாகும். மேற்படிப்பு ரீதியாக அனுகூலம் ஏற்படும்.

பரிகாரம்: அம்மனுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்திலுள்ள பிரச்சனைகள் அகலும்.

Previous Post
Next Post