astrology dinamani
மே மாத எண்கணித பலன்கள் – 3
2019/05/09

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு

எந்த விஷயத்திலும் சிந்தித்து செயலாற்றும் மூன்றாம் எண் அன்பர்களே, இந்த மாதம் வெளியூர் பயணவாய்ப்புகள் உண்டாகலாம். சோம்பலும் சோர்வும் உண்டாகலாம்.மனதில் தேவையற்ற எண்ணங்கள் ஏற்படும். ஆனாலும் உங்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையால் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

வழக்குகளில் சாதகமான நிலை காணப்படும். திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்தபடி நடக்காமல் சற்று மந்தமாக காணப்படும். பணவரத்து தாமதமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்பு அதிகமாகும். முயற்சிகள் பயன்தராமல் போகலாம்.

குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் தொல்லைகள் ஏற்படலாம். தாய் வழி உறவினர்களிடம் வீண் மனஸ்தாபம் உண்டாகலாம்.

கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது. அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு வீண் மனக்கவலை உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில்  மந்தமான நிலை மாற கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நன்மை தரும்.

பரிகாரம்: நவக்கிரகத்தில் குருபகவானை முல்லை மலர்சூடி வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வநிலை உயரும்.

Previous Post
Next Post