astro_dinamani
மூல நட்சத்திரப் பலன்கள் (தனுசு)
2013/11/23

அன்பு, பண்பு, பணிவு, இரக்கம், கருணை நிறைந்தவர்கள். வாழ்க்கையில் குறிக்கோள் இல்லாமல் இருப்பதில்லை. வருடம் ஒருமுறை வாழ்க்கையை புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள். எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை.

நிகழ்காலத்தை சரியாக கவனித்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறவர்கள். பல வகை ஆற்றல் மிக்கவர்கள். எதையும் திறம்பட முடிக்கும்  ஆற்றல் உண்டு. அடிக்கடி தங்கள் கருத்துக்களை, அபிப்பிராயங்களை மாற்றிக்கொண்டே இருப்பார்கள். தங்கள் வாழ்க்கையில் எது நடந்தாலும் கவலைப்படுவதில்லை. கடவுளிடம் ஒப்படைத்துவிட்டு கவலை இல்லாமல் இருப்பார்கள்.

ஆன்மிக நட்சத்திரமாக இருப்பதால் குடும்ப பற்று அற்றுப் போகிறது. குறிப்பாக தாய், தந்தை, உடன் பிறந்தோர் உதவி கிடைப்பதில்லை. 27, 31, 44, 48, 56, 60 வயதுகளில் திடீர் மாற்றங்களை சந்திக்க வைக்கும்.

நட்சத்திர அதிதேவதை : சிவன்
பரிகார தெய்வம்  : விநாயகர்
நட்சத்திர கணம்  : ராட்ஷச கணம்
விருட்சம்   : மா மரம்
மிருகம்   : பெண் நாய்
பட்சி   : செம்போத்து
கோத்திரம்  : அகத்தியர்

Previous Post
Next Post